ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தினால் இலங்­கையின் கட­லு­ணவு பொருட்களின் ஏற்­று­ம­திக்கு விதிக்­கப்­பட்­டி­ருந்த தடை நீக்­கப்­பட்­டதை அடுத்து இலங்­கையின் கட­லு­ணவு ஏற்­று­மதித்­துறை வளர்ச்­சி­ய­டைந்து வரு­கின்­றது.

அந்த வகையில் இலங்­கையின் கட­லு­ணவு ஏற்­று­மதி வரு­மானம் கடந்த ஆண்­டுடன் ஒப்­பி­டு­கையில் இவ்­வாண்டு ஜூன் மாதத்தில் 15.2 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ராக பதி­வாகி 17.4 சத­வீத வரு­மான வளர்ச்­சியை எட்­டி­யுள்­ள­துடன் 2017 ஆம் ஆண்டில் முதல் 06 மாத காலப்­ப­கு­தியில் 40 சத­வீத வளர்ச்­சி­யையும் பதிவு செய்­துள்­ளது.

உல­க­ளா­விய ரீதியில் இலங்­கையின் கட­லு­ணவு பொருட்­க­ளுக்கு ஏற்­பட்ட அதி­க­ரித்த கேள்வி கார­ண­மாக  2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம்கட­லு­ணவு ஏற்­று­மதி வரு­மானம் பதிவு செய்­தி­ருந்த 12.9 மில்­லி­யன்­அ­மெ­ரிக்க டொல­ரா­னது 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 15.2 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ராக 17.4 சதவீ­த­த்தால் அதிகரித்துபதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

இதேபோல் 2016 ஆம் ஆண்டின் முதல் 6 மாத காலத்தில் கட­லு­ணவு ஏற்­று­ம­தி­யினால் பெ­றப்­பட்ட வரு­மானம் 83.5 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ரி­லி­ருந்து 2017 ஆம் ஆண்டின் முதல் 06 மாத காலப்­ப­கு­தியில் 117.1 மில்­லியன் அமெ­ரிக்­க­டொ­ல­ராக வளர்ச்­சி­ய­டைந்­துள்­ளது. இதன் பிர­காரம் கடந்த ஆண்­டுடன் ஒப்­பி­டு­கையில் 2017 ஆம் ஆண்டில் கட­லு­ணவு ஏற்­று­மதி வரு­மானம் 40.3 சத­வீ­தத்தால் அதி­க­ரித்­துள்­ளது.

இந்த வகையில் சர்­வ­தேச ரீதியில் இலங்­கையின் கட­லு­ணவு பொருட்­களுக்கு அதிக கேள்வி நில­விய போதிலும் இலங்­கை­யினால் அந்த கேள்­வியில் மூன்றில் ஒரு பங்­கையே நிரம்பல் செய்ய கூடி­ய­தாக உள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

இலங்­கையின் ஏற்­று­மதி வரு­மா­னத்­திற்கு பாரிய பங்­க­ளிப்பை வழங்கும் ஒரு துறை­யாக விளங்கும் கட­லு­ணவு ஏற்­று­ம­தியை மேலும்விருத்தி செய்­வது அவ­சி­ய­மாகும். தற்போது உல­க­ளா­விய ரீதியில் இலங்­கையின் கட­லு­ணவு பொருட்­க­ளுக்கு நிலவும் கேள்­வியில் மூன்றில் இரண்டு பங்­கினை ஈடு செய்ய முடி­யாமல் உள்­ள­மை­யா­னது இத்­து­றையில் கிடைக்கும் வரு­மா­னத்தில் மூன்றில் இரண்டு பங்­கினை இழப்­பதை குறித்து நிற்­கின்­றது. இந்­நி­லை­யா­னது நாட்டின் பொரு­ளா­தா­ரத்தில் ஏற்­று­ம­தித்­து­றைக்கு பாரிய சவா­லாக அமைந்­துள்­ளது. 

எனவே இத்­து­றையில் நிலவும் குறை­பாடுகளை இனங்­கண்டு அவற்றை நிவர்த்தி செய்­வது அர­சாங்­கத்தின் முதல் கட­மை­யாகும்.

அதே போல் தற்­போது மீன்­பிடி துறையில் ஈடுப்­பட்­டுள்­ள­வர்­களில் அநேக­மா­ன­வர்கள் உள்­நாட்டு சந்தையை நோக்­கி­ய­தாக தமது வியா­பா­ரத்தை மட்­டுப்­ப­டுத்­தி­யுள்­ளனர். இதற்கு பிர­தான காரணம் சர்­வதே சந்­தையை நோக்கி தமது வியா­பா­ரத்தை நகர்த்த தேவை­யான அறி­வின்­மை­யாகும்.தமது ஜீவ­னோ­பாய துறை­யாக மீன்­பிடித் தொழிலை மேற்­கொள்­பவர்கள் இன்று இத்­து­றையை விட்டுநகர்­வ­தையும் எம்மால் காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. இதற்கு பிர­தான காரணம் தமது உற்­பத்­தி­க­ளுக்கு உள்­நாட்டு சந்­தையில் சிறந்த விலை கிடைக்­காமை மற்றும் தமது உற்­பத்­தி­க­ளுக்கு சந்தை வாய்ப்பு கிடைக்­காமல் தொடர் நட்­டத்தை எதிர் நோக்­கு­வ­தாகும். இவர்­க­ளின் இவ்­வா­றான பிரச்­சி­னை­க­ளுக்கு முக்­கிய காரணம் அவர்கள் உள்­நாட்டு சந்தையை மாத்­திரம் இலக்­காக கொண்டு தமது தொழிலை மேற்­கொள்­வ­தாகும். எனவே இவர்­களை சர்­வ­தேச சந்­தையை நோக்கி நகர்த்­து­வதன் மூலம் இவர்­களின் உற்­பத்­தி­க­ளுக்கு சந்தை வாய்பை ஏற்­ப­டுத்தி கொடுத்து அதன் மூலம் சிறந்த வரு­மா­னத்தை பெற்­றுக்­கொ­டுத்து இவர்­களை தொடர்ச்­சி­யாக இத்­து­றையில் தக்க வைத்­துக்­கொள்ள முடியும். 

அதே போல்  இத்­து­றையில் ஈடு­பட்­டுள்­ள­வர்­களின் அநே­க­மா­ன­வர்கள் சிறிய மற்றும் நடுத்­தர தொழில் முயற்­சி­யா­ளர்­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­றனர் எனவே அவர்கள் தமது வியா­பா­ரத்தை விஸ்­த­ரிப்­ப­தற்கு தேவை­யான மூல­த­னத்தை  ஈட்­டிக்­கொள்ளும் பிரச்­சி­னை­யையும் எதிர் நோக்­கு­கின்­றனர்.

எனவே  கட­லு­ணவு உற்­பத்­தியை அதி­க­ரிக்­கவும் ஏற்­று­ம­தியை ஊக்கு­விக்­கவும்   சிறிய மற்றும் நடுத்­தர முயற்­சி­யா­ளர்­களை ஊக்­கப்­ப­டுத்தி அவர்­க­ளுக்கு தேவை­யான அடிப்­படை வச­தி­களை விருத்தி செய்­வ­துதான் இத்­து­றையை மேல் நோக்கி நகர்த்­து­வ­தற்­கான சிறந்த வழி­யாகும்.

அந்த வகையில் உள்­நாட்டு சந்­தைக்கு மாத்­திரம் தம்மை மட்­டுப்­ப­டுத்திக்­கொண்­டுள்ள இவர்களை  சர்வதேச சந்தையை நோக்கி நகர்த்துவ தற்கு இது குறித்த வழிக்­காட்­டல்களை அவர்­க­ளுக்கு வழங்க வேண்டும்.

அதே போல் அவர்­க­ளுக்கு தேவை­யான பயிற்­சிகள், புதிய தொழில்­நுட்­பங்­களை அறி­முகப்­ப­டுத்தல் புதிய மீன்­பிடி உப­க­ர­ணங்­களை அறி­மு­கப்­ப­டுத்தல் மற்றும் அவர்­க­ளுக்கு தேவை­யான கடன் உத­வி­களை பெற்­றுக்­கொ­டுப்­பதன் மூலம் எதிர்­வரும் காலங்­களில் கட­லு­ணவு ஏற்­று­ம­தியை அதி­க­ரித்து அதன் மூலம் பெறப்­படும் வருமானத்தையும் அதிகரித்துக்கொள்ள முடியும்.