தற்போது மிகப் பிரபலமாகி வரும் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”யின் நிறுவனர் அபிஜீத் திப்கே நாளை சனிக்கிழமை (6) அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு செல்லவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
அதனையடுத்து, டெல்லியில் நடைபெறவுள்ள நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான போராட்டத்தில் அபிஜீத் திப்கே கலந்துகொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் உள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான சூர்யகாந்த், அண்மையில் தான் முகங்கொடுத்த வழக்கொன்றின் விசாரணை வேளையில், இளைஞர்களை கடுமையாக விமர்சித்து கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
போலி சான்றிதழ்களை வைத்துக்கொண்டு வேலைவாய்ப்பின்றி திரியும் இளைஞர்களை “கரப்பான் பூச்சிகள்” என்றும் ஒட்டுண்ணிகள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
சமூக ஊடகங்களில் தேவையற்ற விமர்சனங்களை அள்ளி வீசுபவர்களாக தற்போதைய இளைஞர்கள் உள்ளனர் எனக் குறிப்பிட்டு அவர்களை கரப்பான் பூச்சியோடு ஒப்பிட்டு கருத்து தெரிவித்திருந்தார்.
அவரது இந்த சர்ச்சையான கருத்துக்களை கண்டிக்கும் விதமாக இளைஞர்கள் பல்வேறு எதிர்க்கருத்துக்களை வெளியிட்டு வந்தனர்.
அதனையடுத்து, நீதிபதியின் கருத்தை கிண்டல் செய்யும் விதமாக அமெரிக்காவில் உள்ள பொஸ்டன் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் இந்திய மாணவரான அபிஜித் தீப்கே, “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி” என்ற நையாண்டி அரசியல் அமைப்பை கடந்த மாதம் விளையாட்டாக ஆரம்பித்தார்.
இந்தக் கட்சி ஆரம்பிக்கப்பட்டவுடனேயே காட்டுத் தீ போல் பரவலாக இளைஞர்களை சென்றடைந்தது. சமூக ஊடகங்களிலும் இளைஞர்கள் வட்டாரத்திலும் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”க்கு மிகுந்த வரவேற்பு பெற்றது.
அபிஜீத் திப்கேயின் குடும்பத்தினர் சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள வாலுஜ் என்கிற பகுதியில் வசித்து வருகின்றனர்.
“கரப்பான் பூச்சி” பெயரில் கட்சி ஆரம்பிக்கப்பட்டு, சில எதிர்ப்புகளும் வெளிக்கிளம்பிய பின்னர், சமூக ஊடகங்களின் வாயிலாக மிரட்டல்களும் வரத் தொடங்கியது.
அதன் பின்னர், அபிஜீத் திப்கேயின் குடும்பத்தினர் வசிக்கும் வீட்டுக்கு பொலிஸார் பலத்த பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், அபிஜித் திப்கேயின் இந்திய வருகை அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, அவரது குடும்பத்தினர் பாதுகாப்பு கருதி வேறிடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM