ஹேலீஸ் ஃபென்டன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் போக்குவரத்து வாகனப் பிரிவான Hayleys Mobility Limited, இலங்கையில் புத்தம் புதிய JAECOO J5 HEV வாகனத் தெரிவுகளை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த அறிமுகத்தினூடாக, உயர் வினைத்திறன் வாய்ந்த hybrid SUV வாகனத் தெரிவுகளை, இலங்கையின் வளர்ந்து வரும் புதிய-வலு வாகனச் சந்தையின் தேவைகளை நிவர்த்தி செய்வதில் பங்களிப்பு வழங்க முன்வந்துள்ளது.
நகரங்களில் பெருமளவில் பயணிப்போருக்கு உகந்த வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள JAECOO J5 HEV இல், மதிநுட்பமான hybrid வினைத்திறன், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு தொழில்னுட்பங்கள் மற்றும் மீளமைக்கப்பட்ட சௌகரியம் ஆகியன உள்ளடங்கியுள்ளன. இவை சிறந்த வாகனச் செலுத்தல் அனுபவத்தை வழங்குவதுடன், நகரங்களில் பயணம் செய்வதற்கும், நீண்ட தூரப் பயணங்களுக்கும் உகந்ததாக அமைந்திருக்கச் செய்துள்ளன.
JAECOO J5 HEV இல் 1.5L Turbo GDI என்ஜின் காணப்படுவதுடன், மதிநுட்பமாக இலத்திரனியல் மோட்டர் மற்றும் Dedicated Hybrid Transmission (DHT) ஆகியன காணப்படுவதுடன், இவற்றினூடாக இணைந்த 221 hp வலு வெளிப்படுத்துவதுடன், 295 Nm டோர்க் வெளியிடப்படுகிறது. இவற்றினூடாக 0–100 km/h acceleration ஐ 7.9 செக்கன்களில் எய்தக்கூடியதாக இருப்பதுடன், நெரிசல்மிக்க நகர சூழல்களிலும், நீண்ட நெடுஞ்சாலைப் பயணங்களிலும் மிருதுவான பயண அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாகவும் இருக்கும்.
hybrid கட்டமைப்பினால் கவனிக்கத்தக்க எரிபொருள் வினைத்திறனான லீற்றருக்கு 18.9 கிலோமீற்றர்கள் எனும் (5.3 L/100 km) சிக்கனம் வழங்கப்படுவதால், தினசரி பாவனையின் போது குறைந்த எரிபொருள் நுகர்வை எய்த முடியும். முழுத் தாங்கி எரிபொருளினூடாக 950 கிலோமீற்றர்களுக்கு அதிகமான தூரத்தை பயணிக்க முடியும் என்பதுடன், J5 HEV இனால் நீண்ட தூரப் பயணங்களின் போது மேலதிக சௌகரியம் சேர்க்கப்படுகிறது.
அறிமுக நிகழ்வில் ஹேலீஸ் ஃபென்டென்ஸ் லிமிடெட் முகாமைத்துவப் பணிப்பாளர் ஹசித் பிரேமதிலக கருத்துத் தெரிவிக்கையில், “JAECOO J5 HEV இன் அறிமுகத்தினூடாக, புத்தாக்கமான, எதிர்காலத்திற்கு உகந்த போக்குவரத்துத் தீர்வுகளை இலங்கையில் அறிமுகம் செய்வதற்கான எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பு பிரதிபலிக்கப்பட்டுள்ளது. சிக்கனம் மற்றும் செயற்திறன் ஆகியவற்றை வழங்கும் வாகனங்களுக்கான கேள்வி அதிகரித்து வரும் நிலையில், ஸ்மார்ட்டான மற்றும் மிருதுவான வாகன செலுத்தல் அனுபவத்தை நாடும் வாடிக்கையாளர்களின் சிறந்த தெரிவாக J5 HEV அமைந்திருக்கும்.” என்றார்.
Hayleys Mobility Limited இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரொஷானி தர்மரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் சாரதி சந்தையில் வளர்ந்து வரும் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் JAECOO J5 HEV கவனமான முறையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதனூடாக வினைத்திறன், சிக்கனம் மற்றும் தினசரி பயன்பாட்டுக்கு உகந்த நடைமுறைச் சாத்தியம் போன்றன சீராக வழங்கப்படுகின்றன. ஹேலீஸ் விற்பனைக்கு பிந்திய வலையமைப்பு மற்றும் சேவை நிபுணத்துவம் ஆகியவற்றின் வலிமையுடன், வாடிக்கையாளர்களுக்கு கொள்வனவுக்கு அப்பால், ஒப்பற்ற உரிமையாண்மை அனுபவத்தையும் வழங்குகிறது.” என்றார்.
Hayleys Mobility இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஜீவ் பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “சிறந்த hybrid வினைத்திறன் மற்றும் சிக்கனம் ஆகியவற்றை வழங்குவதற்கு அப்பால், வாடிக்கையாளர்களுக்கு முழுமையான மன நிம்மதியை வழங்குவதற்கான எமது அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதாக JAECOO J5 HEV அமைந்துள்ளது. J5 HEV 7 வருட வாகன உத்தரவாதம் மற்றும் 8 வருட பற்றரி உத்தரவாதம் ஆகியவற்றைக் கொண்டுள்ளதுடன், வாடிக்கையாளர்களுக்கு இலங்கையின் நம்பிக்கையை வென்ற கூட்டாண்மை நிறுவனத்தினால் வழங்கப்படும் உரிமையாண்மை அனுபவத்தையும் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.” என்றார்.
ரூ. 19.9 மில்லியன் ரூபாய் என விலையிடப்பட்டுள்ள (வற் வரி அடங்கலாக), JAECOO J5 HEV ஐ தற்போது Hayleys Mobility காட்சியறைகளிலிருந்து கொள்வனவு செய்யலாம். இதில் கொழும்பிலுள்ள OMODA & JAECOO பிரதான காட்சியறைகளும் அடங்கியுள்ளன.
அறிமுகத்தை முன்னிட்டு, முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு விசேட அறிமுக சலுகையாக ரூ. 1 மில்லியன் விலைக்கழிவை வழங்க Hayleys Mobility முன்வந்துள்ளது. அடுத்த தலைமுறை hybrid mobility தீர்வை நாடும் வாடிக்கையாளர்களுக்கு உயர்ந்த பெறுமதியை சேர்ப்பதாக இது அமைந்திருக்கும்.
மேலதிக தகவல்களுக்கு, Hayleys Mobility உடன் 0112 222 222 தொடர்பு கொள்ளவும் அல்லது www.hayleysmobility.com இணையத்தளத்தைப் பார்க்கவும்.
Hayleys Mobility பற்றி
ஹெய்லிஸ் ஃபென்டன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் mobility பிரிவான, Hayleys Mobility, இலங்கையின் போக்குவரத்துத் துறையை மறுவரையறை செய்து, புதிய வலு மூலங்களிலான வாகனத் தீர்வுகளை வழங்கி வருகின்றது. electric, hybrid மற்றும் பிற மேம்பட்ட வாகனத் தொழில்நுட்பங்களில் உலகப் புகழ்பெற்ற, வேகமாக வளர்ந்து வரும் வர்த்தக நாமங்களுடனான பிரத்தியேகக் கூட்டாண்மைகள் மூலம், இத்துறை வணிக மற்றும் பயணிகள் தேவைகள் இரண்டிற்குமான அதிநவீன போக்குவரத்து மற்றும் charging உட்கட்டமைப்புகளை வழங்குகிறது. இதன் மூலம், அறிவார்ந்த, தூய்மையான மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான mobility ecosystem ஐ நோக்கிய நாட்டின் மாற்றத்தை இது முன்னெடுத்துச் செல்கிறது.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM