சட்டவிரோதமாக இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு ஒரு கிலோகிராம் எடையுள்ள தங்க நகைகளை தன்னுடைய குத வழியினுள் மறைத்து வைத்து கடத்த முற்பட்டவர் கட்டுநாயக்க சுங்க பிரிவினரால் நேற்று பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கொழும்பு, பொரளை பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் என சுங்கப்பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 4,523,850 ரூபா பெறுமதியான 4 தங்க பிஸ்கட்களும், 3 தங்க கட்டிகளும், 6 தங்க நகைகளும், வெள்ளி பூசப்பட்ட 2 தகடுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க ஊடக அதிகாரியான சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.

குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பாக சுங்கப்பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட வருகின்றனர்.