இத்தாலி டயமண்ட் லீக்கில் ருமேஷ் தரங்க வரலாற்று சாதனை; தேசிய சாதனையையும் புதுப்பித்தார்

05 Jun, 2026 | 10:17 AM
image

(நெவில் அன்தனி)

இத்தாலியின் ரோம் நகரில் நேற்று (04) வியாழக்கிழமை இரவு நடைபெற்ற டயமண்ட் லீக் தொடர் தடகள போட்டியில் இலங்கையின் ருமேஷ் தரங்க புதிய போட்டி சாதனையை நிலைநாட்டி வரலாறு படைத்துள்ளார்.

இப்போட்டியில் 23 வயதான ருமேஷ் தரங்க 92.62 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து இந்த அசாத்திய திறமையை பதிவு செய்தார்.

இலங்கை தடகள வரலாற்றில் ஈட்டி எறிதலில் 90 மீட்டருக்கும் அதிக தூரம் பதிவு செய்யப்பட்டது இதுவே முதல் தடவையாகும். அவரது இந்த முயற்சி ஈட்டி எறிதில் தேசிய சாதனையாகவும் பதிவானது.

'நான் இன்றைய தினம் தேசிய சாதனை நிலைநாட்ட கடும் முயற்சி எடுத்துக்கொண்டேன். அந்த சாதனையைவிட மூன்று மீட்டர் தூரம் அதிகமாக எறிந்ததையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன்' என இந்த சாதனை குறித்து ருமேஷ் தரங்க தெரிவித்தார்.

உலகின் முன்னணி தடகள வீரர்கள் பங்கேற்ற  இத்தொடரில், ருமேஷ் வெளிப்படுத்திய இந்தத் திறமையானது புதிய போட்டி சாதனையாக அமைந்ததுடன், முழு உலகிலும் இந்த வருடத்திற்கான ஈட்டி எறிதலில் அதிகூடிய தூரமாகவும் (World Leading) பதிவாகியுள்ளது.

இதன் மூலம், 2006ஆம் ஆண்டில் நோர்வே வீரர் அண்ட்ரியாஸ் தோர்கில்ட்சன் 90.34 மீட்டர் தூரம் எறிந்து நிலைநாட்டியிருந்த போட்டி சாதனையை ருமேஷ் தரங்க புதுப்பித்துள்ளார்.

அத்துடன், ஈட்டி எறிதல் போட்டியில் ஆசிய வீரர் ஒருவர் வெளிப்படுத்திய இரண்டாவது சிறந்த தூரப் பெறுதியாகவும் இது அமைகின்றது.

இப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள பாகிஸ்தானின் அர்ஷத் நதீம், இறுதியாக நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் 92.97 மீட்டர் தூரத்தைப் பதிவு செய்திருந்தார்.

ருமேஷின் இந்த சாதனை உலக ஈட்டி எறிதல் வரலாற்றில் உலகின் 8ஆவது சிறந்த தூரப் பெறுதியாக  பதிவாகியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாற்றுவீரர் டொரெஸ் மேலதிக நேரத்தில் புகுத்திய...

2026-07-20 11:08:12
news-image

16 ஆண்டுகளுக்குப் பிறகு பிபா உலகக்...

2026-07-20 05:03:51
news-image

பிபா உலகக் கிணத்தை வெலலப் போவது...

2026-07-19 14:37:01
news-image

கோல் கெலன்ட்ஸ் அணி 5 விக்கெட்களால்...

2026-07-19 13:38:29
news-image

கோல் மழை பொழியப்பட்ட போட்டியில் பிரான்ஸை...

2026-07-19 10:04:41
news-image

சகோதர கழகங்களுக்கு இடையிலான சுப்பர் லீக்...

2026-07-19 09:14:36
news-image

ரீஸா ஹெண்ட்றிக்ஸ், குல்பாதின் நய்ப் அபாரம்;...

2026-07-18 21:25:07
news-image

கிரிக்கெட் ஜாம்பவான் சேர் கார்பீல்ட் சோபர்ஸ்...

2026-07-18 09:51:09
news-image

நடப்பு சம்பியன் புளூ ஸ்டார் கழகத்தை...

2026-07-18 05:26:17
news-image

கோலாகல ஆரம்ப விழாவுடன் எல்பிஎல் தொடங்கியது;...

2026-07-18 00:35:39
news-image

வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஆறுதல் வெற்றியை...

2026-07-18 08:46:44
news-image

ஜெவ்னா கிங்ஸ் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெளியாகும்...

2026-07-17 15:31:54