நடிகர் பிரஜின் கதையின் நாயகனாக நடித்து வரும் 'அந்தரன்' திரைப்படம் உண்மை சம்பவங்களை தழுவி தயாராகி இருக்கிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அந்தரன்' திரைப்படத்தில் பிரஜின், இவானா வருண் ,அனுபமா குமார், ஆதிரன் பத்மன், 'அருவி' பாலா, மு கி சாம்பசிவம், ரமேஷ்பாபு, அர்ஜுன் தேவ், பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா கண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ் ஆர் ஹரி இசையமைத்திருக்கிறார். திரில்லராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மு.கி. சாம்பசிவம் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் படக் குழுவினருடன் தயாரிப்பாளர் சி வி குமார் , பிக் பொஸ் புகழ் விக்கல்ஸ் விக்ரம் மற்றும் சபரி ஆகியோர் சிறப்பு அதிதியாக பங்கு பற்றினார்.
இந்நிகழ்வில் படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ''அந்தரன் என்றால் வேட்டைக்காரன். அதாவது மறைந்திருந்து தாக்குபவன் என புரிந்து கொள்ளுங்கள். நாளாந்தம் எம்முடைய வாழ்வில் சிறிய அளவிலான பல விடயங்களை புறந்தள்ளி கடந்து செல்கிறோம். ஆனால் அந்த விடயங்களை நாளடைவில் பாரிய அச்சுறுத்தலாக மாற்றம் பெறும் தருணத்தில் தான் அதன் வீரியம் புரியவரும். இதனை இந்திய நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் ஒரு வழக்கினை அடிப்படையாகக் கொண்டு, உண்மை சம்பவங்களை தழுவி இந்த படைப்பு உருவாகியுள்ளது'' என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM