தயாரிப்பாளரும் அறிமுக நாயகனுமான கே ஜே ஆர் விளையாட்டு வீரராக நடித்திருக்கும் 'அங்கீகாரம்' திரைப்படம் எதிர்வரும் 26 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அங்கீகாரம்' திரைப்படத்தில் கே ஜே ஆர், விஜி வெங்கடேஷ், அஜித் கோஷி, சிந்துரி விஸ்வநாத், ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ. விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். ஸ்போர்ட்ஸ் டிராமாவாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்வஸ்திக் விஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தின் பாடல்கள், அறிமுக காணொளி ஆகியவை வெளியாகி படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில்... இந்தத் திரைப்படம் எதிர்வரும் 26 ஆம் திகதி அன்று வெளியாகிறது என படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'ஹீரோ', 'டாக்டர்', 'அயலான்' ஆகிய திரைப்படங்களை தயாரித்ததன் மூலம் இந்திய மதிப்பில் 120 கோடி ரூபாய்க்கும் மேல் நஷ்டத்தை சந்தித்த தயாரிப்பாளர் கே ஜே ஆர் - இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடித்திருப்பதால் திரையுலகினர் இப்படம் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்கள்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM