உங்களிடம் பணம் இருந்தாலும்.. அதை செலவு செய்வதற்கான மனம் இருந்தாலும்.. தொழில் தொடங்க வேண்டும் என்று விரும்பினாலும்.. நல்ல தொழிலாளர்கள் கிடைக்க வேண்டும் என விரும்பினாலும்... வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாலும்... குலதெய்வத்தின் அருள் பார்வை இல்லாமல் எதையும் வெற்றிகரமாக செய்திட இயலாது. பலர் அனுபவம்- திறமை- வாய்ப்பு- இருந்தும் குலதெய்வத்தின் சாபம் அல்லது தோஷம் காரணமாக அவர்களால் முன்னேறவே இயலாது. ஒப்பீடு அளவில் சிலருக்கு திறமை குறைவாக இருந்தாலும்... அனுபவம் குறைவாக இருந்தாலும்.. வாய்ப்புகள் கிடைப்பது குறைவாக இருந்தாலும்.
குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக இருப்பதால்.. அவர்களால் தொடர்ந்து வெற்றியை பெற முடியும் என எம்முடைய முன்னோர்கள் உறுதியாக கூறுகிறார்கள். இந்நிலையில் குலதெய்வத்தின் கடைக்கண் பார்வை கிடைக்காத காரணத்தினால் வாழ்க்கையில் வெற்றியை ருசிக்காதவர்களுக்கு எம்முடைய ஆன்மீகம் முன்னோர்கள் பிரத்யேக குறிப்பினை வழங்கி உள்ளனர்.
உங்களுடைய ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தில் குலதெய்வத்தின் சூட்சமம் உள்ளது. நம்பிக்கை வாய்ந்த சோதிடரிடம் உங்களுடைய ஜாதகத்தை கொடுத்து குலதெய்வ சாபம் இருக்கிறதா? என அவதானித்து சொல்லுங்கள்.. எனக் கேட்டால், அவர்கள் உங்களுடைய பரம்பரைக்கான குலதெய்வம் எது? என்பதை கண்டறிந்து சொல்வார்.
அதன் பிறகு அந்த கோயிலுக்கு உங்களுடைய பிறந்த கிழமை அல்லது உங்களுடைய ஜென்ம நட்சத்திரம் ஆகிய நாளில் அங்கு சென்று இரவு தங்கி அடுத்த நாள் காலையில் குலதெய்வத்திற்கு அபிஷேகங்கள்- அலங்காரங்கள் - பூ மாலை சாற்றி, பொங்கலை படையலிட்டு.. மனதார மண்டியிட்டு பிரார்த்தனை செய்து வந்தால்.. உங்களுடைய கோரிக்கை எதுவாக இருந்தாலும் விரைவாக நிறைவேறும். குலதெய்வம் சாபம் நீங்கும். தோஷம் நீங்கும். குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். வாழ்க்கையில் முன்னேற இயலும்.
தொகுப்பு: சுபயோக தாசன்
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM