வவுனியாவிலிருந்து பொதுமகனொருவர் வவுனியா மன்னார் வீதி நெளுக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் பலியாகியுள்ளதாக பொலிஸாரின் அவசர சேவை இலக்கமான 119 இலக்கத்திற்கு இன்று மதியம் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார்.

இதனையடுத்து கொழும்பு அவசர பொலிஸ் இலக்கத்திலிருந்து வவுனியா போக்குவரத்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. 

வவுனியாவிலிருந்து நெளுக்குளம் நோக்கி விரைந்த போக்குவரத்து பொலிஸார் நெளுக்குளம் பகுதி முழுவதும் விபத்துக்கள் எவையும் இடம்பெற்றுள்ளதா என தேடிப்பார்வையிட்ட சமயத்தில் விபத்துக்கள் எவையும் இடம்பெறவில்லை.

பின்னர் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸாரிடம் வினாவிய போது, விபத்துக்கள் எவையும் இடம்பெறவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து குறித்த முறைப்பாட்டை மேற்கொண்ட நபர் அழைப்பு மேற்கொண்ட தொலைபேசி இலக்கத்தின் மூலம் குறித்த நபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.