நவம்மஹர புகையிரதக் கடவை புனரமைப்பு பணிகளுக்காக மூடப்படுகிறது

Published By: Digital Desk 3

04 Jun, 2026 | 03:11 PM
image

பிரதான புகையிரதக் மார்க்கத்தில் ஹொரபே உபபுகையிரத நிலையத்திற்கு அருகாமையிலுள்ள 'நவம்மஹர' புகையிரதக் கடவையில் அவசர அத்தியாவசியப் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகப் புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

இதன் காரணமாகக் குறித்த கடவையில் தற்காலிகப் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.

புகையிரதத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, 08 ஆம் மைல் கல், 05  பகுதியில் அமைந்துள்ள இக்கடவையில், வரவிருக்கும் நாட்களில் முற்பகல் 8.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும்.

அதன்படி, நாளை வெள்ளிக்கிழமை இக்கடவையினூடான வாகனப் போக்குவரத்து நடவடிக்கைகள் பகுதியளவில் கட்டுப்படுத்தப்படும். சனிக்கிழமை இக்கடவையினூடான வாகனப் போக்குவரத்து நடவடிக்கைகள் முழுமையாக தடை செய்யப்படும்.

அத்துடன், ஞாயிற்றுக்கிழமை இக்கடவையினூடான வாகனப் போக்குவரத்து நடவடிக்கைகள் மீண்டும் பகுதியளவில் கட்டுப்படுத்தப்படும்.

இந்த அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகளைப் பாதுகாப்பாகவும் திறமையாகவும் நிறைவு செய்வதை உறுதிப்படுத்துவதற்காகவே இக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய முன்பள்ளி ஆசிரியர் தொழில்சார் சங்கம்...

2026-06-17 15:46:58
news-image

பௌத்த இராஜ்ஜியத்தின் அடித்தளத்தை தகர்க்க முற்படும்...

2026-06-17 15:47:28
news-image

நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க அரசியல் வேறுபாடுகளைத்...

2026-06-17 16:41:30
news-image

ஹங்குரங்கெத்த உள்ளிட்ட பகுதிகளில் காட்டுக்குரங்குகள் ஆக்கிரமிப்பால்...

2026-06-17 15:48:11
news-image

வாகன விலைகள் பன்மடங்கு உயரும் அபாயம்:...

2026-06-17 16:42:09
news-image

நெல் கிலோவுக்கு 140, கீரி சம்பாவுக்கு...

2026-06-17 16:42:59
news-image

ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் தவறான தகவல்களுக்கு...

2026-06-17 17:34:09
news-image

காங்கேசன்துறையில் தங்கம் கடத்தல் சந்தேகம்: 26...

2026-06-17 22:16:29
news-image

சுகாதாரம், ஊடகத்துறையின் அபிவிருத்திற்காக கொரிய அரசாங்கத்தின்...

2026-06-17 17:35:12
news-image

சலே, கோட்டாபய உள்ளிட்ட எவராக இருந்தாலும்...

2026-06-17 18:46:59
news-image

பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில்...

2026-06-17 21:00:54
news-image

கம்மன்பில போன்றவர்களின் கருத்துக்கள் இன நல்லிணக்கத்தை...

2026-06-17 18:47:48