இலங்கை விமானப்படையினரால் 5 ஆவது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'குவாட்ரங்கிள் கிண்ணம் 2026' கோல்ஃப் தொடர், எதிர்வரும் ஜூன் மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இவ்விளையாட்டுத் தொடரானது முதல் முறையாக, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பிரசித்தி பெற்ற பகுதியான சீகிரியா விமானப்படை கோல்ஃப் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்தத் தொடருக்கான முதன்மைப் அனுசரணையினை 'ஜே.ஏ.டி ஹோல்டிங்ஸ்' தனியார் நிறுவனம் வழங்குகின்றது. இதற்கான நிதியுதவிக் காசோலையை அந்த நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஏலியன் குணவர்தன, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்கவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்துள்ளார்.
அத்துடன், இந்தத் தொடருக்கான இணை அனுசரணையாளர்களாக பிரவுன்ஸ் ஈ.வி தனியார் நிறுவனம், எல்.ஓ.எல்.சி ஃபைனான்ஸ் நிறுவனம், ஜெட்விங் ஹோட்டல்ஸ் நிறுவனம், என்.சி.ஜி ஹோல்டிங்ஸ் தனியார் நிறுவனம் மற்றும் டி.வி.எஸ் லங்கா தனியார் நிறுவனம் ஆகியன பங்களிப்பு வழங்குகின்றன.
இப்போட்டித் தொடரில் நாட்டின் முன்னணி கோல்ஃப் விளையாட்டு சங்கங்களான கொழும்பு ரோயல்ஸ், விக்டோரியா, நுவரெலியா மற்றும் ஈகில்ஸ் கோல்ஃப் லிங்க்ஸ் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பெருமளவிலான உள்நாட்டு ஆண், பெண் வீரர்கள் தங்களது பங்கேற்பை உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM