உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர் 

04 Jun, 2026 | 01:18 PM
image

பாராளுமன்ற சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன புதன்கிழமை (3) உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டமூலத்தில் கையொப்பமிட்டு சான்றுரைப்படுத்தினார். 

இதற்கமைய, 2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தைத் திருத்துவதற்காக, கடந்த மே 19ஆம் திகதி  பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டமூலம், 2026ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டம் என இனி நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த புதிய சட்டத் திருத்தத்தின் முக்கிய நோக்கங்கள் மற்றும் உள்ளடக்கங்கள் 

பிரதான நோக்கங்கள்:

வரி நிர்வாக நடைமுறைகளை நவீனமயமாக்கல்.

தற்போதுள்ள வரி விதிகளில் தெளிவை ஏற்படுத்துதல்.

வரி இணக்கம் மற்றும் அமுலாக்கத்தை வலுப்படுத்துதல்.

வரிக் கணிப்பீடுகள் மற்றும் கழிவுகளின் துல்லியத்தன்மையை மேம்படுத்தல்.

மூலோபாய பொருளாதார இலக்குகளுக்கு ஆதரவளித்தல்.

வெளிப்படைத்தன்மை மற்றும் பணச்சலவை தடுப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துதல்.

முக்கிய மாற்றங்கள்:

கட்டாய TIN சான்றிதழ்: சில குறிப்பிட்ட முக்கிய நிதிசார் பரிவர்த்தனைகளின்போது, வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) சான்றிதழைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வருமானக் கணிப்பீட்டில் திருத்தங்கள்: வருமானத்தை கணக்கிடும் முறையில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வரி விலக்குகள் பற்றிய தெளிவு: குறிப்பிட்ட சில திட்டங்கள் மற்றும் வணிகங்களுக்கான வரி விலக்குகள் குறித்து மேலதிக தெளிவு வழங்கப்பட்டுள்ளது.

தகவலை வெளிப்படுத்தல்: உரிய அதிகாரிகளுக்கு தகவல்களை வெளிப்படுத்துவதற்கான வரம்பு  மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் : குற்றவாளிகள்...

2026-06-13 13:53:19
news-image

2029 நாமல் ஜனாதிபதி ; தமிழர்களின்...

2026-06-13 17:21:32
news-image

மாகாணசபைத் தேர்தலின் சட்ட ,தொழில்நுட்ப சிக்கல்கள்...

2026-06-13 17:20:23
news-image

ஜே.ஆரை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ்...

2026-06-13 17:03:31
news-image

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியையும் சர்வதேச போட்டித்திறனையும்...

2026-06-13 10:52:00
news-image

பேக்கரித்துறைக்கு இயற்கை விவசாய பொருட்களை பயன்படுத்துவது...

2026-06-13 16:34:27
news-image

செம்மணி புதைகுழி உண்மைகள் தெற்கின் மனசாட்சியைத்...

2026-06-13 15:57:28
news-image

சஹ்ரானை உருவாக்கிய சிந்தனைகள் இன்னும் நாட்டில்...

2026-06-13 15:22:47
news-image

கொலையாளிகளும் ஊழல்வாதிகளும் உத்தமர்களாக வர இடமளிக்க...

2026-06-13 13:56:01
news-image

எரிபொருள் மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு;...

2026-06-13 14:47:01
news-image

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த வலி நிவாரணி...

2026-06-13 13:50:38
news-image

நாட்டை சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கு ‘சிவப்பு’...

2026-06-13 13:58:45