யோஷித்த ராஜபக்ஷவுக்கு எதிரான பணமோசடி வழக்கு ஜூலை 9 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

04 Jun, 2026 | 01:15 PM
image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித்த ராஜபக்வுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 09 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேல் நீதிமன்ற நீதியரசர் உதேஷ் ரணதுங்க முன்னிலையில் இந்த வழக்கு இன்று வியாழக்கிழமை (04) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது நீதிமன்றத்தில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, பிரதிவாதியினால் தாக்கல் செய்யப்பட்ட மறுசீரமைப்பு மனுவொன்று நேற்று புதன்கிழமை (03) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

அந்த மனு மீதான விசாரணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஜூன் மாதம் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அதுவரை, மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கு தொடர்பான சாட்சியங்களை முன்னெடுக்கப் போவதில்லை எனப் முறைப்பாட்டாளர்களின் தரப்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளதாகத் தெரிவித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல், எனவே சாட்சிகளை அழைக்காமல் வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறு மேல் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மேல் நீதிமன்ற நீதியரசர், வழக்கின் விசாரணைகளை ஜூலை 09 ஆம் திகதி வரை ஒத்திவைத்ததுடன், அன்றைய தினம் சாட்சிகளை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் உத்தரவிட்டார்.

சுமார் 73 மில்லியன் ரூபாவிற்கும் அதிக மதிப்புடைய ஐந்து காணிப் துண்டுகளை சட்டவிரோதமான முறையில் சம்பாதித்ததன் மூலம், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்துள்ளதாகக் கூறி, யோஷித்த ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரப்பான் பூச்சி, எலியைக் கண்டால் நடுங்கும்...

2026-06-08 17:34:53
news-image

உடல்நிலை மோசம்; உயில் எழுதத் தயார்:...

2026-06-08 17:25:22
news-image

டொலர் உயர்வால் மக்கள் மீதே கடன்...

2026-06-08 20:38:26
news-image

செம்மணி புதைகுழி அகழ்வில் சிறுவர்களின் எலும்புக்கூடுகள்...

2026-06-08 19:24:40
news-image

விகாரையிலிருந்து திருடப்பட்ட புராதன புத்தர் சிலையுடன்...

2026-06-08 18:28:03
news-image

மூன்று நாட்கள் விசேட டெங்கு ஒழிப்பு...

2026-06-08 18:31:32
news-image

உயிர்த்த ஞாயிறு விசாரணைக்கு கம்மன்பில, விமல்,...

2026-06-08 18:16:45
news-image

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 3...

2026-06-08 17:41:30
news-image

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராகவும் பாடகர்...

2026-06-08 17:26:31
news-image

அரசாங்கம் கோப்புகளை மூடி மறைக்கிறது: புலனாய்வு...

2026-06-08 17:25:46
news-image

கலால் வரி ஆணையாளருக்கு எதிராக ராஜகிரியவில்...

2026-06-08 16:58:43
news-image

இலங்கையில் தடையை மீறி மின்-சிகரெட்டுகள் விற்கப்படுகிறது...

2026-06-08 17:03:05