பல தசாப்தங்களாக இலங்கையுடன் நெருங்கிய நட்புடன் செயற்பட்டுவரும் நிப்போன் பவுண்டேஷன் ஊடாக, இலங்கையின் கடற்றொழில், கடல்சார் விஞ்ஞானம் மற்றும் கடல்வள மேலாண்மைத் துறைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்குத் தேவையான தொழில்நுட்ப அறிவு மற்றும் பயிற்சிகளை வழங்குவது குறித்து ஜப்பானின் நிப்போன் பவுண்டேஷனின் தலைவர் யோஹேய் சசகாவா அவர்களுக்கும் இடையிலான விசேட உத்தியோகபூர்வ சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும் உலகின் முன்னணி தொண்டு நிறுவனங்களில் ஒன்றான ஜப்பானின் நிப்போன் பவுண்டேஷனின் தலைவர் யோஹேய் சசகாவா இடையிலான விசேட உத்தியோகபூர்வ சந்திப்பொன்று 02ம் திகதி புதன்கிழமை டோக்கியோவில் நடைபெற்றது.
குறிப்பாக, உலக கடல்சார் பல்கலைக்கழகம் ஊடாக இலங்கைக்கு வழங்கப்படும் உயர்கல்வி மற்றும் உதவித்தொகை வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு திரு சசகாவா இணக்கப்பாட்டை தெரிவித்தார்.
கடற்றொழில் துறைக்கு மேலதிகமாக, இலங்கையின் பொதுவான அபிவிருத்திக்காக நிப்போன் பவுண்டேஷன் ஆற்றும் பாரிய பங்களிப்பிற்கு அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
குறிப்பாக, வட மாகாணத்திலுள்ள 100 பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு வழங்கப்படும் ஆதரவையும், இலங்கையிலிருந்து தொழுநோயை ஒழிப்பதற்காக குறித்த அறக்கட்டளை வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்பையும் அமைச்சர் இங்கு பாராட்டினார்.
அரிசி உற்பத்தியில் இலங்கையைத் தன்னிறைவு அடையச் செய்வதற்குத் தேவையான ஒரு தனித்துவமான விவசாயத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் சசகாவா அவர்கள் அமைச்சருடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டார்.
திரு. யோஹேய் சசகாவா அடுத்த வாரம் இலங்கைக்கு விசேட விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதுடன், இதன்போது இலங்கையில் புதிதாகக் கட்டப்பட்ட கலாசார நிலையமொன்றையும் திறந்து வைக்கவுள்ளார்.
இலங்கைக்கும் நிப்போன் பவுண்டேஷனுக்கும் இடையிலான இந்த ஒத்துழைப்பு தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் முன்னோக்கி கொண்டு செல்லப்படும் என அமைச்சர் இங்கு உறுதியளித்தார்.
இந்த நிகழ்வில் ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் பிவிதுரு ஜனக குமாரசிங்க மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே.கோலித கமல் ஜினதாச ஆகியோரும் கலந்துகொண்டனர்.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM