சிறுமி வைஷாலியின் கை அகற்றப்பட்ட வழக்கு: விசாரணை தாமதத்திற்கு நீதிமன்றம் கண்டனம்: இறுதி அறிக்கையை துரிதமாக சமர்ப்பிக்க கட்டளை

Published By: Digital Desk 3

04 Jun, 2026 | 04:28 PM
image

சிறுமி வைஷாலியின் கை அகற்றப்பட்ட வழக்கில், காலத்தை இழுத்தடித்து, நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கும் பொலிஸாரின் போக்கைக் கண்டித்த நீதிமன்றம், குறுகிய காலத்தில் இறுதி அறிக்கையை வழங்க வேண்டும் என பொலிஸாருக்குக் கட்டளையிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சாண்டில்யன் வைஷாலி என்ற சிறுமி காய்ச்சல் மற்றும் தோலில் ஏற்பட்ட தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார். 

அவருக்கு மணிக்கட்டில் ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டது. ஓரிரு நாட்களில் மணிக்கட்டு வீக்கமடைந்து பின்னர் அந்தப் பகுதி வெட்டி அகற்றப்பட்டது.

இந்த விடயத்தில் மருத்துவத் தவறு நேர்ந்துள்ளதாக சிறுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டியதுடன், பல்வேறு தரப்பினரிடம் தமக்கான நீதியையும் கோரியிருந்தனர். 

இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில், மேலதிக நீதவான் நஜ்மி ஹுசைன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கின் கடந்த தவணையில், “இந்த வழக்குத் தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கையொன்றை சட்டமா அதிபருக்கு அனுப்பிவைத்துள்ளோம். 

எனவே அவரின் ஆலோசனையைப் பெறுவதற்கான நீண்ட கால அவகாசத்தை நீதிமன்றம் வழங்கவேண்டும்” என்று பொலிஸார் நீதிமன்றில் கோரியிருந்தனர். ஏற்கனவே இந்த வழக்கு இரண்டு வருடங்கள் கடந்து விட்டதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, நீண்டதவணையை வழங்க மறுத்து , சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுவதற்கான கால அவகாசத்தின் பொருட்டு நேற்றுவரை வழக்கை நீதிவான் தவணையிட்டார்.

நேற்று (03) புதன்கிழமை வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, வழக்குத் தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கை இதுவரை சட்டமா அதிபருக்கு அனுப்பப்படவில்லை என்றும், கொழும்பில் உள்ள பொலிஸ் சட்டக்கல்லூரி ஊடாக இன்மேல்தான் சட்டமா அதிபருக்கு விசாரணை அறிக்கை அனுப்பப்படவுள்ளது என்றும் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி சார்பாக மன்றில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி எஸ்.கே.புரந்தரன், மன்றைப் பொலிஸார் தவறாக வழிநடத்துகின்றனர் எனவு, வழக்கை காலந்தாழ்த்திக் கொண்டு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது எனவும் கோரினார். 

கடந்த வழக்குத் தவணையில் முழுமையான விசாரணை அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று கூறி நீண்ட தவணை கோரிய பொலிஸார், தற்போது விசாரணை அறிக்கை இன்னமும் அனுப்பப்படவில்லை எனக் குறிப்பிடுவதையும் சுட்டிக்காட்டினார். 

சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுவதற்கு நீதிமன்றம் ஒரு கால எல்லையைப் பொலிஸாருக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை முன்வைத்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதவான், இந்த வழக்கில் பொலிஸாரின் போக்கைக் கடுமையாகக் கண்டித்தார். இந்த வழக்கின் ஆரம்பத்தில் இருந்து மாறுபட்ட தகவல்களையே தெரிவித்து வருகின்றனர். 

 வழக்குத் தொடுநர் தரப்பான பொலிஸ் தரப்பில் இருந்து ஒவ்வொரு வழக்குத் தவணையின்போதும் மேலதிக அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 

பொலிஸாரின் செயற்பாடுகள் காலத்தை இழுத்தடிப்புச் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்குவதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு குந்தகம் விளைவிப்பனவாகவும் அமைகின்றன.

இறுதி விசாரணை அறிக்கையை யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமையகம் குறுகிய காலத்தில், இல்லாவிட்டால் அடுத்த தவணையில் வழங்க வேண்டும். நீதிமன்ற வழக்குக் குறிப்பேடுகளை வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கும், பொலிஸ்மா அதிபருக்கும் அனுப்பவேண்டும் என்று நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் : குற்றவாளிகள்...

2026-06-13 13:53:19
news-image

2029 நாமல் ஜனாதிபதி ; தமிழர்களின்...

2026-06-13 17:21:32
news-image

மாகாணசபைத் தேர்தலின் சட்ட ,தொழில்நுட்ப சிக்கல்கள்...

2026-06-13 17:20:23
news-image

ஜே.ஆரை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ்...

2026-06-13 17:03:31
news-image

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியையும் சர்வதேச போட்டித்திறனையும்...

2026-06-13 10:52:00
news-image

பேக்கரித்துறைக்கு இயற்கை விவசாய பொருட்களை பயன்படுத்துவது...

2026-06-13 16:34:27
news-image

செம்மணி புதைகுழி உண்மைகள் தெற்கின் மனசாட்சியைத்...

2026-06-13 15:57:28
news-image

சஹ்ரானை உருவாக்கிய சிந்தனைகள் இன்னும் நாட்டில்...

2026-06-13 15:22:47
news-image

கொலையாளிகளும் ஊழல்வாதிகளும் உத்தமர்களாக வர இடமளிக்க...

2026-06-13 13:56:01
news-image

எரிபொருள் மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு;...

2026-06-13 14:47:01
news-image

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த வலி நிவாரணி...

2026-06-13 13:50:38
news-image

நாட்டை சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கு ‘சிவப்பு’...

2026-06-13 13:58:45