யாழ். உரும்பிராயில் கோவில் திருவிழா ஒன்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைப் பாராட்டி இசை நிகழ்ச்சியொன்றில் பாடல்களைப் பாடிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணப் பிராந்திய குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கிளிநொச்சி, உதயநகர் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த மே மாதம் 31 ஆம் திகதி சாவகச்சேரி, நாவற்குழி பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றிலேயே இந்த இளைஞர் பாடல்களைப் பாடியுள்ளார்.
குறித்த இளைஞர் அன்றைய தினம் தான் பாடிய 04 பாடல்களைத் தொகுத்து, விடுதலைப் புலிகள் அமைப்பிற்காகப் பாடப்பட்ட பாடல்கள் எனத் தனது 'டிக் டொக்' சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளமையும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இளைஞர் 1978 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் 3 (ஈ) பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தைச் புரிந்துள்ளார் என்ற அடிப்படையில், கைது செய்யப்பட்டு அவர் பயன்படுத்திய கைத்தொலைப்பேசியுடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், சந்தேகநபரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து யாழ்ப்பாணப் பிராந்திய குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரும், சாவகச்சேரி தலைமையகப் பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM