காலி - தடல்ல பகுதியில் பஸ் வீதியை விட்டு விலகி சுவருடன் மோதி விபத்து: மூவர் காயம்!

04 Jun, 2026 | 11:10 AM
image

காலி - கொழும்பு பிரதான வீதியின் காலி, தடல்ல பகுதியில் பயணித்த பயணிகள் போக்குவரத்து பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி, அருகில் இருந்த சுவருடன் மோதி இன்று (04) வியாழக்கிழமை  காலை விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.

அம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் போக்குவரத்துப் பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து நடந்த சமயத்தில் பஸ்ஸுக்குள் சுமார் 20 பயணிகள் வரை பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பஸ் கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது, தடல்ல பகுதியில் வைத்து சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கம்  காரணமாகப் பஸ்ஸை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி, அருகில் இருந்த சுவருடன் மோதியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த விபத்தினால் பஸ்  கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் : குற்றவாளிகள்...

2026-06-13 13:53:19
news-image

2029 நாமல் ஜனாதிபதி ; தமிழர்களின்...

2026-06-13 17:21:32
news-image

மாகாணசபைத் தேர்தலின் சட்ட ,தொழில்நுட்ப சிக்கல்கள்...

2026-06-13 17:20:23
news-image

ஜே.ஆரை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ்...

2026-06-13 17:03:31
news-image

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியையும் சர்வதேச போட்டித்திறனையும்...

2026-06-13 10:52:00
news-image

பேக்கரித்துறைக்கு இயற்கை விவசாய பொருட்களை பயன்படுத்துவது...

2026-06-13 16:34:27
news-image

செம்மணி புதைகுழி உண்மைகள் தெற்கின் மனசாட்சியைத்...

2026-06-13 15:57:28
news-image

சஹ்ரானை உருவாக்கிய சிந்தனைகள் இன்னும் நாட்டில்...

2026-06-13 15:22:47
news-image

கொலையாளிகளும் ஊழல்வாதிகளும் உத்தமர்களாக வர இடமளிக்க...

2026-06-13 13:56:01
news-image

எரிபொருள் மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு;...

2026-06-13 14:47:01
news-image

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த வலி நிவாரணி...

2026-06-13 13:50:38
news-image

நாட்டை சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கு ‘சிவப்பு’...

2026-06-13 13:58:45