நாவலப்பிட்டி, மாப்பாகந்த பகுதியில் இன்று (04) வியாழக்கிழமை காலை பிரதான வீதியோரத்தில் இருந்த பாரிய மரமொன்று திடீரென வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியில் வண்டி மீது முறிந்து வீழ்ந்ததில், பாடசாலை மாணவன் ஒருவர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இன்றையதினம் காலை நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியே விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த பாடசாலை மாணவன் மற்றும் இரண்டு பெண்கள் (என மொத்தம் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மரம் வீழ்ந்து முச்சக்கரவண்டி முற்றிலும் நசுங்கிய போதிலும், அதன் சாரதி அதிர்ஷ்டவசமாக எவ்விதப் பாதிப்புமன்றி உயிர் தப்பியுள்ளார்.
நாவலப்பிட்டி பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து மரத்தை வெட்டி அகற்றி, உயிரிழந்தவர்களின் சடலங்களை நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
நீண்ட காலமாக ஆபத்தான நிலையில் காணப்பட்ட குறித்த மரத்தை அகற்றுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாததே இந்த சோக சம்பவத்திற்குக் காரணமாக அமைந்துள்ளதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் நாவலப்பிட்டி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM