ஹொரணை, அங்குருவாதொட்ட பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் நேற்று (03) புதன்கிழமை மாலை ஏற்பட்ட திடீர் பயங்கர தீ விபத்தில் 11 முதியவர்கள் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், இந்த அனர்த்தத்தின் போது அங்கிருந்த 3 பேரைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 7 பேர் கடுமையான தீக்காயங்களுடன் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட தருணத்தில், குறித்த முதியோர் இல்லத்திற்குள் ஊழியர்கள் மற்றும் முதியவர்கள் உட்பட மொத்தம் 72 பேர் தங்கியிருந்துள்ளனர்.
தீ பரவ ஆரம்பித்ததும் விரைந்து செயற்பட்ட பிரதேச வாசிகள், தீயணைப்புப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து இல்லத்திற்குள் சிக்கியிருந்த 51 பேரை அதிர்ஷ்டவசமாகப் பத்திரமாக மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட 51 பேரும் தற்போது தற்காலிகமாகப் பாதுகாப்பான வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கான அவசரத் தேவைகள் கவனிக்கப்பட்டு வருகின்றன.
நேற்றையதினம் மாலை திடீரெனப் பற்றியெரிந்த இந்தத் தீ விபத்துக்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. மின் கசிவினால் இந்த விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து அங்குருவாதொட்ட பொலிஸார் மற்றும் விசேட தடயவியல் பொலிஸ் குழுவினர் இணைந்து மேலதிக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது ஹொரணை வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், காணாமல் போயுள்ள 3 தேடிப் பாதுகாப்புக் குழுவினர் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM