(நெவில் அன்தனி)
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக கிங்ஸ்டன், சபினா பார்க் விளையாட்டரங்கில் புதன்கிழமை (03) இரவு நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 41 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
இதன் மூலம் புதிய பயிற்றுநர் கெறி கேர்ஸ்டனின் சகாப்தத்தில் சர்வதேச கிரிக்கெட்டை இலங்கை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.
இப் போட்டியில் இலங்கை 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 303 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 49.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 262 ஓட்டங்களைப் பெற்றது.

பெத்தும் நிஸ்ஸன்க, அணித் தலைவர் குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் சிறந்த திட்டமிடலுன் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
அவர்கள் இருவரும் 2ஆவது விக்கெட்டில் 136 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

மத்திய வரிசையில் சரித் அசலன்க, ஜனித் லியனகே ஆகியோரும் துடுப்பாட்டத்தில் தங்களாலான அதிகபட்ச பங்களிப்பை வழங்கினர்.
துஷ்மன்த சமீர 4 முக்கிய விக்கெட்களை வீழ்த்திய போதிலும் ஓட்டங்களை அதிகமாகக் கொடுத்திருந்தார்.

இந்த வெற்றியுடன் இரண்டு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை அடைந்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்டத்தில் மூவர் மாத்திரமே 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். அணித் தலைவர் ஷாய் ஹோப் அரைச் சதம் குவித்தார்.
எண்ணிக்கை சுருக்கம்
இலங்கை 50 ஓவர்களில் 303 - 7 விக். (பெத்தும் நிஸ்ஸன்க 79, குசல் மெண்டிஸ் 72, சரித் அசலன்க 45, ஜனித் லியனகே 44 ஆ.இ., பவன் ரத்நாயக்க 24, மெத்யூ போர்ட் 44 - 2 விக்., ரொஸ்டன் சேஸ் 47 - 2 விக்., ஜேடன் சீல்ஸ் 67 - 2 விக்.)
மேற்கிந்தியத் தீவுகள் 49.2 ஓவர்களில் சகலரும் ஆட்டம் இழந்து 262 (ஷாய் ஹோப் 56, ஜஸ்டின் க்றீவ்ஸ் 45, ரொஸ்டன் சேஸ் 33, துஷ்மன்த சமீர 67 - 4 விக், மஹீஷ் தீக்ஷன 26 - 2 விக்.)
ஆட்டநாயகன்: குசல் மெண்டிஸ்
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM