(இராஜதுரை ஹஷான்)
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் செயற்திட்டத்தை 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளோம். நிலைபேறான இலக்குக்கமைய பொருளாதார முகாமைத்துவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது என நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் பெர்னாண்டோ தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் செயற்திட்டத்தின் 5 மற்றும் 6 ஆவது மீளாய்வு வெற்றிகரமாக நிறைவு செய்து, 6 மற்றும் 7 ஆம் தவணை தொகையான 695 மில்லியன் டொலர் திறைசேரிக்கு வைப்பிலிடப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் செயற்திட்டத்துக்கமைய ஏற்றுக்கொள்ளப்பட்ட நிபந்தனைகள் மற்றும் பரிந்துரைகள் சிறந்த முறையில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
செயற்திட்டங்களை வெற்றிகரமாக அமுல்படுத்தியதால் தான் நாட்டின் நிதி ஒழுக்கம் உறுதிப்படுத்தப்பட்டு பொருளாதாரம் மீட்சிப்பெற்றுள்ளது.இந்த விரிவாக்கப்பட்ட செயற்திட்டத்துக்கமைய இன்னும் 2 தவணை கடன்தொகை கிடைக்கப்பெறவுள்ளன.
2027 ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் செயற்திட்டத்தை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளோம்.நாணய நிதியத்தின் ஒத்துழைப்பால் நாட்டின் நிதி கையிருப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு கையிருப்பும், ரூபாவின் கையிருப்பும் ஸ்திரமான தன்மையில் காணப்படுகிறது. நிலைபேறான இலக்குக்கமைய பொருளாதார முகாமைத்துவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM