கடற்தொழில்துறை அபிவிருத்தித் திட்டங்களை உருவாக்க தொழில்நுட்பக்குழுவை அனுப்பிவைக்க ஜைக்கா இணக்கம்

Published By: Vishnu

04 Jun, 2026 | 03:42 AM
image

(நா.தனுஜா)

இலங்கையின் கடற்தொழில் துறையின் தேவைப்பாடுகள் மற்றும் முன்னுரிமைக்குரிய விடயங்களை அடிப்படையாகக்கொண்டு புதிய அபிவிருத்தித் திட்டங்களை உருவாக்குவதற்காக தொழில்நுட்பக்குழுவொன்றை இலங்கைக்கு அனுப்புவதற்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகம் உடன்பட்டதாக கடற்தொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

டோக்கியோவில் நடைபெற்றுவரும் தீவு நாடுகளின் சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் கடற்தொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகத்தின் (ஜைக்கா) அதிகாரிகளுடன் சந்திப்பில் ஈடுபட்டார்.

இலங்கையின் கடற்தொழில் துறையை நவீனமயமாக்குவதற்கும், இத்துறையின் நீண்டகால வளர்ச்சிக்கு அவசியமான தொழில்நுட்ப மற்றும் உட்கட்டமைப்பு சார்ந்த குறைபாடுகளை இனங்கண்டு, அவற்றுக்குரிய நிலையான தீர்வுகளை வழங்குவதற்கும் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதற்கு ஜைக்கா அதிகாரிகள் இணங்கியதாக அமைச்சர் சந்திரசேகர் அவரது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

'எனது வேண்டுகோளுக்கு அமைய, கடற்தொழில் துறையின் தேவைப்பாடுகள் மற்றும் முன்னுரிமைக்குரிய விடயங்களை அடிப்படையாகக்கொண்டு புதிய அபிவிருத்தித் திட்டங்களை உருவாக்குவதற்காக ஜைக்கா தொழில்நுட்பக்குழுவொன்றை இலங்கைக்கு அனுப்புவதற்கும் அவர்கள் உடன்பட்டனர்' என்றும் அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று பல ஆண்டுகளாக சவால்களை எதிர்கொண்டுவரும் கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தின் பிரச்சினைகளுக்குத் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் ரீதியில் தீர்வு காண்பது குறித்தும் இச்சந்திப்பின்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் சந்திரசேகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுரேஷ் சலேயின் கடந்த கால சேவையைக்...

2026-06-08 15:30:16
news-image

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைப் பாதுகாக்க முன்னின்ற...

2026-06-08 14:01:15
news-image

சுரேஷ் சலேவை விடுவிக்கக் கோரி சத்தியாகிரக...

2026-06-08 16:09:10
news-image

அரசியலுக்குப் பலிகொடுக்க மாட்டேன்; இராணுவத்திற்கு பிள்ளைகளை...

2026-06-08 16:02:06
news-image

கரப்பான் பூச்சி, எலியைக் கண்டால் நடுங்கும்...

2026-06-08 17:34:53
news-image

உடல்நிலை மோசம்; உயில் எழுதத் தயார்:...

2026-06-08 17:25:22
news-image

டொலர் உயர்வால் மக்கள் மீதே கடன்...

2026-06-08 20:38:26
news-image

செம்மணி புதைகுழி அகழ்வில் சிறுவர்களின் எலும்புக்கூடுகள்...

2026-06-08 19:24:40
news-image

விகாரையிலிருந்து திருடப்பட்ட புராதன புத்தர் சிலையுடன்...

2026-06-08 18:28:03
news-image

மூன்று நாட்கள் விசேட டெங்கு ஒழிப்பு...

2026-06-08 18:31:32
news-image

உயிர்த்த ஞாயிறு விசாரணைக்கு கம்மன்பில, விமல்,...

2026-06-08 18:16:45
news-image

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 3...

2026-06-08 17:41:30