ஹொரணை அரச வங்கி யொன்றின் எ.டி.எம் இயந்துரத்தில் வைப்பதுக்கிருந்த 3.5 கோடி ரூபா பணம் திருட்டு

Published By: Vishnu

03 Jun, 2026 | 10:58 PM
image

அரச வங்கி ஒன்றின் ஏ.டி.எம்  தானியங்கி இயந்திரங்களில் வைப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்ட 3.5 கோடி ரூபா (35 மில்லியன்) பணம் இனந்தெரியாத நபரொருவரால் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் புதன்கிழமை (3) பிற்பகல் ஹொரணை  பகுதியில் இடம்பெற்றுள்ளது.

 புதன்கிழமை (3) பிற்பகல் 2.55 மணியளவில், வங்கியின் ஊழியர் ஒருவர் இரண்டு பணப்பைகளைத் தனது இரு கைகளிலும் கொண்டு சென்றுக் கொண்டிருந்த போது வங்கியின் பின்புறமாக இருந்த  கதவின் ஊடாக வெளியே எடுத்துச் சென்றுள்ளார். இதன்போது அங்கு வந்த நபரொருவர், அவ்ஊழியரிடமிருந்த இரண்டு பணப்பைகளையும் பலவந்தமாகப் பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார்.

இவ்வாறு திருடப்பட்ட பணம், வங்கியின் ஏ.டி.எம் இயந்திரங்களில் வைப்பதற்காகக் கொண்டு செல்லப்பட்ட பணம் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.  பணத்தை திருடி சென்ற சந்தேகநபர் தொடர்பில் இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகாத நிலையில், ஹொரணை  பொலிஸார் இக்கொள்ளைச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹிஸ்புல்லா பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ்...

2026-06-08 14:00:34
news-image

சுரேஷ் சலேயின் கடந்த கால சேவையைக்...

2026-06-08 15:30:16
news-image

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைப் பாதுகாக்க முன்னின்ற...

2026-06-08 14:01:15
news-image

சுரேஷ் சலேவை விடுவிக்கக் கோரி சத்தியாகிரக...

2026-06-08 16:09:10
news-image

அரசியலுக்குப் பலிகொடுக்க மாட்டேன்; இராணுவத்திற்கு பிள்ளைகளை...

2026-06-08 16:02:06
news-image

கரப்பான் பூச்சி, எலியைக் கண்டால் நடுங்கும்...

2026-06-08 17:34:53
news-image

உடல்நிலை மோசம்; உயில் எழுதத் தயார்:...

2026-06-08 17:25:22
news-image

டொலர் உயர்வால் மக்கள் மீதே கடன்...

2026-06-08 20:38:26
news-image

செம்மணி புதைகுழி அகழ்வில் சிறுவர்களின் எலும்புக்கூடுகள்...

2026-06-08 19:24:40
news-image

விகாரையிலிருந்து திருடப்பட்ட புராதன புத்தர் சிலையுடன்...

2026-06-08 18:28:03
news-image

மூன்று நாட்கள் விசேட டெங்கு ஒழிப்பு...

2026-06-08 18:31:32
news-image

உயிர்த்த ஞாயிறு விசாரணைக்கு கம்மன்பில, விமல்,...

2026-06-08 18:16:45