நுவரெலியா சீதையம்மன் ஆலய திருக்கல்யாணம் வைபவத்தில் நித்யஸ்ரீ மகாதேவனின் இசைக் கச்சேரியும் அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளி மாணவர்களின் "அசோக வனம்" நாட்டிய நாடகமும் 

03 Jun, 2026 | 07:04 PM
image

நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ஸ்ரீ ராமன் - சீதாதேவி திருக்கல்யாணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 31) நடைபெற்றது. 

இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த பிரபல கர்நாடக இசைக்கலைஞர் நித்யஸ்ரீ மகாதேவனின் இசைக் கச்சேரி அன்றைய தினம் நிகழ்த்தப்பட்டது. 

அத்துடன் இந்த வைபவத்தில் இராமாயண காவியத்தில் இடம்பெற்ற காட்சிகள் "அசோக வனம்" நாட்டிய நாடகமாக ஆடப்பட்டது. இந்த நடனத்தை, கொழும்பு அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளி மாணவர்கள், பள்ளியின் இயக்குநரும் நடன ஆசிரியருமான திவ்யா சுஜேன் நடன அமைப்பில் வழங்கினர். 

இந்த நாட்டிய நாடகத்தினைத் தொடர்ந்து மூன்று வருடங்களாகத் தயாரித்து மேடையேற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இதன்போது நடனக் கலைஞரான திவ்யா சுஜேனுக்கு "ஞான சுவேதினி" பட்டத்துக்கான விருது வழங்கப்பட்டது. 

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், ஆயுள்கால காப்பாளர் ஆதிமூலம், ஆலய சபை உறுப்பினர்கள் நடராஜா, வைத்திலிங்கம் முதலானோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எழுத்தாளர் சிவகௌரியின் ‘முத்துப்பரல்கள்’ ஹைக்கூ கவிதை...

2026-06-07 23:47:08
news-image

யாழ்ப்பாண இராசதானி சங்கிலியன் மன்னனின் சிரார்த்த...

2026-06-07 12:06:11
news-image

வாகரை கதிரவெளியில் பகலவன் கல்வி நிலையம்...

2026-06-05 21:03:05
news-image

நுவரெலியா சீதையம்மன் ஆலய திருக்கல்யாணம் வைபவத்தில்...

2026-06-03 19:04:59
news-image

இலங்கை கோபியோ அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கைக்கான...

2026-06-03 18:14:49
news-image

கொழும்பில் கோலாகலமாக நடைபெறவுள்ள 2026 டிராகன்...

2026-06-02 18:20:54
news-image

கராத்தே நடுவர் மனோகரன் சின்னத்தம்பிக்கு கராத்தே...

2026-06-02 14:20:06
news-image

பொகவந்தலாவையில் சோட்டோகான் கராத்தே பயிற்சி

2026-06-02 17:53:05
news-image

சுதந்திர ஊடக இயக்கத்துக்கு புதிய நிர்வாகக்...

2026-06-02 12:18:09
news-image

வைகாசி விசாகத்தை முன்னிட்டு கொழும்பு, கொட்டாஞ்சேனை...

2026-06-01 14:51:49
news-image

"ஈழமும் மணிமேகலையும் - 2026" மாநாட்டின்...

2026-06-01 14:41:17
news-image

"ஈழமும் மணிமேகலையும்" இலக்கிய மாநாட்டின் ஆரம்ப...

2026-06-01 14:41:46