மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட்: விளையாடும் பதினொருவர்

Published By: Vishnu

03 Jun, 2026 | 06:38 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கைக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையில் கிங்ஸ்டன் சபினா பார்க் விளையாட்டரங்கில் இன்று இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள்க கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் விளையாடவுள்ள பதினொருவரை அணி முகாமைத்துவம் அறிவித்துள்ளது.

புதிய தலைவர் குசல் மெண்டிஸ், புதிய தலைமைப் பயிற்றுநர் கெறி கேர்ஸ்டன் ஆகியோரின் கீழ் இல்ஙகை விளையாடும் முதலாவது சர்வதேச கிரிக்கெட் தொடர் இதுவாகும்.

இன்றைய போட்டியில் பெத்தும் நிஸ்ஸன்கவுடன்  கமிந்து மெண்டிஸ் ஆரம்ப வீரராக களம் இறங்கவுள்ளார். ஆனால், கடைசி நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டால் அணித் தலைவர் குசல் மெண்டிஸ் ஆரம்ப வீரராக விளையாடுவார்.

வழமையான ஆரம்ப வீரர் காமில் மிஷாரவுக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

புதிய பயிற்றுநர் கெறி கேர்ஸ்டன் வித்தியாசமான வியூகத்தை அமைத்து விளையாடுவதால் கமிந்து மெண்டிஸை ஆரம்ப வீரராக களம் இறக்க அவர் தீர்மானித்திருக்கலாம் என கருதப்படுகிறது.

அத்துடன் ஜனித் லியனகே, மிலன் ரத்நாயக்க ஆகியோரும் அணியில் பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்தத் தொடர் 2027இல் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் உலகக் கிண்ணத்துக்கான தகுதிகாண் போட்டியாகவும் அமைவதால் இரண்டு அணிகளுக்கும் இந்தத் தொடர் முக்கியம் வாய்ந்ததாக அமையவுள்ளது.

இதன் காரணமாக இரண்டு அணிகளும் ஒன்றை ஒன்று வீழ்த்த முயற்சிக்கும். அதேவேளை, போட்டி பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

இதுவரை விளையாடப்பட்டுள்ள 67 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா 32 போட்டிகளில் வெற்றிபெற்று சமநிலையில் இருக்கின்றன. 3 போட்டிகளில் முடிவு கிட்டவில்லை.

இலங்கையின் விளையாடும் அணி

பெத்தும் நிஸ்ஸன்க, கமிந்து மெண்டிஸ (உப தலைவர்), குசல் மெண்டிஸ் (தலைவர்), பவன் ரத்நாயக்க, சரித் அசலன்க, ஜனித் லியனகே, வனிந்து ஹசரங்க, மிலன் ரத்நாயக்க, மஹீஷ் தீக்ஷன, துஷ்மன்த சமீர, அசித்த பெர்னாண்டோ.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்