சிறு தோட்ட தேயிலை விவசாயம் பெரும் வீழ்ச்சியில்: 2030 இலக்கு வெறும் கனவாக மாறும் அபாயம்

Published By: Vishnu

03 Jun, 2026 | 06:34 PM
image

(செ.கவிஷனா)

இலங்கைக்கு அதிகளவு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் தேயிலைத்துறையின் தற்போதைய வீழ்ச்சி நிலை காரணமாக 2030 ஆம் ஆண்டளவில் 400 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தியை எட்டும் இலக்கு வெறும் கனவாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய தேயிலைத்தோட்ட உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சமன் கீகனகே தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் மொத்த தேயிலை நிலப்பரப்பு சுமார் 2 இலட்சத்து 3 ஆயிரம் ஹெக்டேயர் ஆகும். இதில் சிறிய அளவிலான தேயிலை விவசாயிகளுக்கு சொந்தமானது 35 சதவீதம் என்ற மிகக் குறைந்த நிலப்பரப்பு மட்டுமே என்றபோதிலும் மொத்த தேயிலை உற்பத்தியில் சுமார் 70 சதவீதம் பங்களிப்பை வழங்குபவர்கள் சிறு தேயிலை தோட்ட விவசாயிகள் ஆவர். இலங்கையில் சுமார் 5 இலட்சம் சிறு தேயிலை தோட்ட விவசாயிகள் இருப்பதோடு நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 10 இலட்சம் மக்கள் இத்தொழிலை நம்பி வாழ்கின்றனர். இதேவேளை, பெருந்தோட்ட நிறுவனங்கள் பெரும்பாலான தேயிலை நிலங்களை கொண்டிருந்த போதிலும் அவற்றின் தேயிலை உற்பத்தி பங்களிப்பு 30 சதவீதம் மட்டுமேயாகும். இவ்வாறான சூழ்நிலையில் தேயிலை தொழில்துறை மூலம் ஆண்டுதோறும் 1.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக ஈட்டப்படுகிறது. குறிப்பிட்ட வருமானத்தில் 70 சதவீத பங்கு சிறு தேயிலை தோட்ட விவசாயிகள் ஆகும்.

இருப்பினும், தற்போதைய சூழ்நிலையில் சிறு தேயிலை தோட்ட விவசாயிகளுக்கு உரம் மற்றும் இரசாயனங்களை பெற்றுக்கொள்வது மிகவும் கடினமாகியுள்ளதுடன் 50 கிலோகிராம் உரம் கொண்ட மூடை ஒன்றின் விலை சுமார் 18,000 ரூபா வரை உயர்ந்துள்ளது. அத்துடன் விவசாயத்துக்கு தேவையான உபகரணங்களின் விலைகளும் மிக அதிகமாக காணப்படுவதால் இத்தொழில் தற்போது சவாலான நிலையை எதிர்கொண்டுள்ளது. தேயிலை ஏற்றுமதிக்கு 18 சதவீத கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளின் பச்சைக்கொழுந்துக்கு மிகக் குறைந்த தொகையே கிடைக்கிறது. இதன் காரணமாக தேயிலை நிலங்களை பாராமரிக்கவும் அதனூடாக வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்லவும் மேலதிகப் பணத்தை செலவிட வேண்டியுள்ளதால் பயிர்செய்கை நிலங்கள் கைவிடப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, 2030 ஆம் ஆண்டளவில் 400 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தியை எட்ட வேண்டும் என்ற கைத்தொழில் அமைச்சின் இலக்கு வெறும் கனவாகவே மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது ஆண்டுக்கு சுமார் 220 மில்லியன் கிலோ தேயிலை மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பிட்ட இந்த இலக்கை வெறும் வார்த்தைகளாக மாற்றிவிடாமல் வெற்றிகரகமாக அடைவதற்கு புதிய சர்வதேச சந்தைகளைக் கண்டறிதல், விவசாயிகளுக்கு தேவையாக உரம் மற்றும் இரசாயனங்களை நியமான விலையில் வழங்குதல், தேயிலை உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான அறிவு மற்றும் பயிற்சிகளை வழங்கல், தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துதல் மற்றும் தேயிலை சார்ந்த வீதிகள் உட்பட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் அரசாங்கம் உடனடியாக அரசாங்கம் கவனத்தை செலுத்துதல் வேண்டும்.

தேயிலை விவசாயிகளை பாதுகாப்பதற்கான சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் இலங்கையில் காணப்பட்டாலும் பண பலத்தால் அவற்றை முடக்கி விவசாயிகளை சுரண்டும் ஒரு தரப்பினர் காணப்படுகின்றனர். இலங்கை தேயிலை சபை, தேயிலை ஆராய்ச்சி நிலையம், சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபை மற்றும் அரச நிறுவனங்கள் தேயிலை தொழிலை பாதுகாப்பதற்கும், வலுப்படுத்துவதற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். எனவே, ஊழலையும், மோசடியையும் ஒழித்து உள்நாட்டு ரீதியாக இலங்கைக்கு அதிகளவான வெளிநாட்டு அந்நியச் செலவாணியை ஈட்டித்தரும் துறைக்கு அனைவரினதும் முதன்மை கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார். 

--

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதிக்கு இலங்கை நீதிச்சேவை சங்கம் கடிதம்

2026-07-14 12:15:12
news-image

மூதூர் சந்தையில் கைப்பற்றப்பட்ட 500 கிலோ...

2026-07-14 11:58:00
news-image

சிறைச்சாலை அதிகாரிகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை;...

2026-07-14 11:31:55
news-image

மத்தள விமான நிலையத்தை நிர்வகிக்க 19...

2026-07-14 11:31:37
news-image

இலங்கையில் பயணிகளை ஏற்றிச்செல்ல ட்ரோன் சேவை...

2026-07-14 11:26:29
news-image

யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்தில் பறந்த ட்ரோன்...

2026-07-14 11:14:47
news-image

நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை ஆண்டிறுதிக்குள்...

2026-07-14 10:45:46
news-image

ஜனாதிபதி தலைமையில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை...

2026-07-14 10:47:25
news-image

தலைமன்னாரில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட ஷாம்பூ...

2026-07-14 12:12:37
news-image

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பிரான்ஸ் முக்கிய...

2026-07-14 10:22:54
news-image

2026ஆம் ஆண்டின் உலகின் சிறந்த 50...

2026-07-14 10:35:12
news-image

போக்குவரத்து அபராதம் செலுத்துமாறு வரும் போலி...

2026-07-14 10:21:51