(எம்.எப்.எம்.பஸீர், செ.சுபதர்ஷனி)
திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மூன்றாம் தரப்பினரால் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை அறிக்கையொன்றை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று (3) கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
இவ்வழக்கு கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றில் விளக்கமளித்த விசாரணை அதிகாரிகள், கடன் செலுத்தும் பணிகளை மேற்கொண்ட வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் அதிகாரிகள் அசல் உடன்படிக்கை குறித்து எந்தவொரு தேடுதலோ அல்லது தகவல்களையோ வினவமாலே, 'எக்ஸ்போர்ட் பைனான்ஸ் ஆஸ்திரேலியா' (Export Finance Australia) என்ற நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரி ஊடாகக் கிடைத்த பட்டியல் (இன்வொய்ஸ்) கணக்குப்பத்திரங்களை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு இந்த கடன் செலுத்தல் பணிகளை மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டனர்.
மேலும், இந்த பணப் பரிமாற்றங்களுடன் தொடர்புடைய சேவையக அமைப்பின் தரவுச் சேவையகக் கட்டமைப்பு தரவுகள் முழுமையாகப் பிரதியெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அதிகாரிகள், அத்தரவுகள் அடங்கிய 4 இருவெட்டுகளை (சிடி) மேலதிக பகுப்பாய்வுப் பணிகளுக்காக கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணினி தடயவியல் பிரிவுக்கு அனுப்புவதற்குத் தேவையான அனுமதியை வழங்குமாறு நீதிவானிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தனர். இதற்கமைய, அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த நீதிவான் அதற்கு அனுமதி வழங்கினார்.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரை 42 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்துக்கு அறிவித்த விசாரணை அதிகாரிகள், இந்த விவகாரத்துடன் தொடர்புடையதாகக் கூறப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் அண்மையில் உயிரிழந்த, வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க நிஷாந்த ராஜபக்ஷவின் மரண பரிசோதனை அறிக்கையின் பிரதியொன்றையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
அத்துடன், இவ்விசாரணை தொடர்பில் நீதிமன்றத்தில் விளக்கமளிப்பதற்காக எதிர்வரும் விசேட தினமொன்றில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதித்துவமும் இடம்பெறவுள்ளதாக விசாரணை அதிகாரிகள் மன்றில் தெரிவித்தனர். இந்நிலையில் மேற்படி வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 8ஆம் திகதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM