கனகராயன் குளத்தில் இடம்பெற்ற விபத்தில்  முன்னாள் யாழ் மாவட்ட அரச அதிபரின் மகன் உட்பட இரு இளைஞர்கள் உயிரிழப்பு.!

Published By: Digital Desk 3

03 Jun, 2026 | 05:37 PM
image

வவுனியா, கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியில் ஏ9 பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ். மாவட்ட முன்னாள் அரச அதிபர் இமெல்டா சுகுமாரின் புதல்வன் உட்பட இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

நேற்று (02) செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா - யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் கனகராயன்குளம் பெரியகுளம் பகுதிக்கு அருகில்  வீதியால் பயணித்த இரு இளைஞர்கள் மீது சொகுசு கார் மோதியதில்  இரு இளைஞர்களும், படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை விபத்துக்குள்ளான சொகுசு காரின் பின்னால் வந்த ஹயஸ் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

உயிரிழந்த இரண்டு இளைஞர்களும் கனகராயன்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதில் ஒருவர் யாழ் மாவட்ட முன்னாள் அரச அதிபர் இமெல்டா சுகுமாரின் புதல்வனான அட்புதராஜா தர்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர்களின் உடல்கள் தற்போது பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இவ்விபத்து தொடர்பாக தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வறட்சியால் 35,169 குடும்பங்களைச் சேர்ந்த 115,586...

2026-09-08 09:27:34
news-image

கிராண்ட்பாஸில் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

2026-09-08 09:20:15
news-image

விளக்கமறியலில் உள்ள நாமல் ராஜபக்‌ஷ பாராளுமன்றம்...

2026-09-08 09:01:06
news-image

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்...

2026-09-08 08:32:24
news-image

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை...

2026-09-07 12:33:54
news-image

இன்றைய வானிலை 

2026-09-08 06:30:43
news-image

பஸ் லலித் வழங்கிய தகவலுக்கமைய ஹங்வெல்ல...

2026-09-08 06:28:10
news-image

இரண்டாம் உலகப் போரின் பின்னர் அண்மையகாலத்தில்...

2026-09-08 06:17:18
news-image

மூதூரில் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு சக்கர...

2026-09-08 06:14:40
news-image

22 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தம்...

2026-09-08 06:03:38
news-image

‘சிரிலிய சவிய’ கணக்கில் ஒரு மில்லியன்...

2026-09-08 05:45:33
news-image

மட்டக்களப்பு ஊழல் மோசடி தொடர்பாக இன்னாள்...

2026-09-08 05:39:50