மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் சென்ற மீனவர் மாயம்

Published By: Digital Desk 3

03 Jun, 2026 | 05:30 PM
image

(செ.சுபதர்ஷனி)

ஹிக்கடுவை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக படகொன்றில் மீனவக் குழுவொன்றுடன் கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர், காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹிக்கடுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிக்கடுவை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 6 பேரைக் கொண்ட மீனவக் குழு ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை (02) மீன்பிடி நடவடிக்கைகளுக்காக படகொன்றில் கடலுக்குச் சென்றுள்ளது. இந்நிலையில் குறித்த குழுவிலிருந்த மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அப்படகின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை கையளித்துள்ளார்.

53 வயதுடைய மீட்டியாகொட பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். சுமார்  கடல் 15 மைல்  தூரம் குறித்த படகு கடலில் பயணித்துள்ளது. இந்நிலையில் அன்றைய தினம் இரவு, உணவு உண்பதற்காக படகில் இருந்த ஏனைய மீனவர்கள் குறித்த நபரைத் தேடிய போது அவர் படகில் இல்லை என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேற்படி மீனவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் ஹிக்கடுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜி.எஸ்.பி.+ உட்பட அனைத்து சலுகைகளையும் நிறுத்துங்கள்...

2026-07-23 05:09:09
news-image

டிஜிட்டல் நிர்வாக, ஊழல் ஒழிப்பு நடவடிக்கை...

2026-07-22 18:14:00
news-image

ஜப்பான் அரசின் கடன் உதவித் திட்டத்தின்...

2026-07-22 12:54:12
news-image

இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனத்தை உருவாக்கும்...

2026-07-22 17:34:35
news-image

காய்ச்சல் ஏற்பட்டால் காலம் தாமதிக்காமல் உடனடியாக...

2026-07-22 14:18:56
news-image

ஜனாதிபதி மாளிகைகளை பயனுள்ள முறையில் பயன்படுத்த...

2026-07-22 14:50:18
news-image

ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை...

2026-07-22 14:49:18
news-image

புதுப்பிக்கத்தக்க மின்சாரக் கட்டண நிர்ணயத்துக்கான மக்கள்...

2026-07-22 14:52:16
news-image

புகையிரத சேவையை நவீனமயமாக்க 2027–2029 அபிவிருத்தித்...

2026-07-22 23:07:26
news-image

வடிகாண்களை மக்கள் அபகரித்து தடைகளை ஏற்படுத்துவதால்...

2026-07-22 15:49:49
news-image

பகிடிவதையால் ஒருவர் உயிரிழப்பு, 106 பேர்...

2026-07-22 14:52:40
news-image

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அரசியல் கைதிகள்...

2026-07-22 16:01:58