வட்டுவாகல் பழைய பாலத்தின் ஒரு பகுதி தமிழின அழிப்பின் நினைவுச் சின்னமாகப் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் - ரவிகரன் எம்.பி வலியுறுத்து

03 Jun, 2026 | 05:23 PM
image

முல்லைத்தீவு - வட்டுவாகல் பழையபாலத்தின் ஒரு பகுதியாவது தமிழ் இன அழிப்பின் நினைவுச்சின்னமாகப் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கினைப்புக்குழுக்கூட்டம் புதன்கிழமை (03) இன்று இடம்பெற்ற நிலையில், குறித்த கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்படுகின்றபோது, பழைய வட்டுவாகல் பாலத்தின் ஒருபகுதி நினைவுச்சின்னமாக பேணிப் பாதுகாக்கப்படவேண்டுமெனக் கோரியிருந்தோம்.

குறிப்பாக எரித்து அழிக்கப்பட்ட யாழ்ப்பாணம் பொது நூலகம் நினைவுச்சின்னமாக பேணிப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இந்த விடயத்திலும் அதேபோல தவறிழைப்பதற்கு இடமளிக்கமுடியாது என்பதையும் அதன்போது சுட்டிக்காட்டியிருந்தோம்.

இருப்பினும் வட்டுவாகல் பாலம் இடித்தழிப்புச் செய்கின்ற செயற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்றுவருகின்றன.

இந்நிலையில் முள்ளிவாய்க்கால் தமிழ் இனவழிப்புச் செயற்பாட்டின் நினைவுச்சின்னமாக வட்டுவாகல் பாலத்தின் ஒருபகுதியை விட்டுவைக்குமாறு மக்களாலும் கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.

எனவே வட்டுவாகல் பழைய பாலத்தின் ஒருபகுதி தமிழ் இனவழிப்பின் சாட்சியாக பேணிப்பாதுகாக்கப்படவேண்டும்.

இந்த விடயத்தில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் உபாலி சமரசிங்கவும் கவனம் செலுத்தவேண்டும்.

இனவழிப்பின் சாட்சியமான பழைய வட்டுவாகல் பாலத்தின் ஒருபகுதியை பேணிப்ப பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்.

மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் இந்தவிடயத்தில் கவனஞ் செலுத்தத் தவறினால் அவரும் சேர்ந்துதான் எமது தமிழ் இன அழிப்பின் சாட்சியத்தை அழிப்பதாக கருதவேண்டிவரும் - என்றார்.

இதன்போது முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும், பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க பதிலளிக்கையில்,

இது ஒரு மனிதாபிமானக் கோரிக்கையாகும். இருப்பினும் தொழில்நுட்ப ரீதியாக பழைய பாலத்தை உடைக்காமல் விடுவதற்கு வாய்ப்பிருக்கின்றதா என்பதை பரிசீலிக்கவேண்டும்.

குறித்த பழைய வட்டுவாகல் பாலத்தை உடைக்காமல் விடுவதால் நீரோட்டம் தடைப்படும் வாய்ப்புக்கள் இருக்கின்றதா என்பதுதொடர்பில் ஆராயவேண்டுமெனவுந் தெரிவித்தார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

நீரோட்டம் தடைப்படும் வகையில் பழையவட்டுவாகல் பாலத்தை விடுமாறு நாம் கோரவில்லை.

தொடக்கப்பகுதி அல்லது, முடிவிடத்தில் பாலப்குதியை நினைவுச்சின்னமாக விடுமாறே நாம் கோருகின்றோம்.

நிச்சயமாக வட்டுவாகல் பழையபாலத்தின் ஒரு பகுதி தமிழின அழிப்பின் நினைவுச்சின்னமாகப் பேணப்படவேண்டும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன் - என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுரேஷ் சலேயின் கடந்த கால சேவையைக்...

2026-06-08 15:30:16
news-image

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைப் பாதுகாக்க முன்னின்ற...

2026-06-08 14:01:15
news-image

சுரேஷ் சலேவை விடுவிக்கக் கோரி சத்தியாகிரக...

2026-06-08 16:09:10
news-image

அரசியலுக்குப் பலிகொடுக்க மாட்டேன்; இராணுவத்திற்கு பிள்ளைகளை...

2026-06-08 16:02:06
news-image

கரப்பான் பூச்சி, எலியைக் கண்டால் நடுங்கும்...

2026-06-08 17:34:53
news-image

உடல்நிலை மோசம்; உயில் எழுதத் தயார்:...

2026-06-08 17:25:22
news-image

டொலர் உயர்வால் மக்கள் மீதே கடன்...

2026-06-08 20:38:26
news-image

செம்மணி புதைகுழி அகழ்வில் சிறுவர்களின் எலும்புக்கூடுகள்...

2026-06-08 19:24:40
news-image

விகாரையிலிருந்து திருடப்பட்ட புராதன புத்தர் சிலையுடன்...

2026-06-08 18:28:03
news-image

மூன்று நாட்கள் விசேட டெங்கு ஒழிப்பு...

2026-06-08 18:31:32
news-image

உயிர்த்த ஞாயிறு விசாரணைக்கு கம்மன்பில, விமல்,...

2026-06-08 18:16:45
news-image

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 3...

2026-06-08 17:41:30