ஆசிய - பசிபிக் பிராந்தியத்தின் பழமையான மருத்துவ நூலகமான 'இலங்கை மருத்துவ நூலகத்தின்' 182 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இந்நாட்டின் மருத்துவ வரலாற்றைக் கலந்தாலோசிக்கும் விசேட நிபுணர்களின் மாநாடொன்று கொழும்பில் நடைபெற்றது.
பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனியின் தலைமையில், கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள இலங்கை மருத்துவ சங்க தலைமையகத்தில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இலங்கை மருத்துவ நூலகம், இலங்கை மருத்துவ சங்கம் மற்றும் தேசிய அறிவியல் அறக்கட்டளை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்நாட்களில் பேராசிரியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், வரலாற்றாசிரியர்கள் மற்றும் சுகாதார வல்லுநர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இம்மாநாட்டின் போது நாட்டின் மருத்துவ பாரம்பரியம், புதிய மருத்துவ கண்டுபிடிப்புகள், மருத்துவத் தொழில்நுட்பங்கள் மற்றும் சுகாதார சேவையின் எதிர்கால முன்னேற்றம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன், இலங்கையின் மருத்துவ வரலாற்றை ஆவணப்படுத்தி அடுத்த தலைமுறைக்காகப் பாதுகாப்பதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.
இங்கு உரையாற்றிய விசேட வைத்திய நிபுணர் ஹென்றி இராஜரத்தினம், இலங்கையின் முதலாவது மருத்துவக் கல்லூரியான யாழ்ப்பாணம் மானிப்பாயில் சாமுவேல் ஃபிஸ்க் கிரீன் மூலமாக மேற்கத்திய மருத்துவக் கல்வி ஆரம்பிக்கப்பட்ட விதம் குறித்து உரையாற்றினார்.
மேலும், கொழும்பு மருத்துவக் கல்லூரியின் ஆரம்பம் மற்றும் இலங்கையின் பாரம்பரிய மருத்துவ முறைகள் குறித்தும் பேராசிரியர்களான சரோஜ் ஜயசிங்க, சேனக பிலபிட்டிய மற்றும் இனோகா கொரியா உள்ளிட்ட பல அறிஞர்கள் உரையாற்றினர்.
1844 ஆம் ஆண்டு ஜூன் 1 முதலாம் திகதி கொலோனியல் மருத்துவ நூலகம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்நுலகம், 1972 ஆம் ஆண்டு இலங்கை மருத்துவ நூலகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய மருத்துவ நூல்கள் மற்றும் மதிப்புமிக்க ஆவணங்களைக் கொண்டுள்ள இந்நூலகம் மருத்துவ வரலாற்று ஆராய்ச்சிக்கு ஒரு புதிய தேசியத் தொடக்கமாக அமையுமென நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM