எல்ல பகுதியில் 98 ஏக்கர் ரிசோர்ட்டை விரிவுபடுத்த நடவடிக்கை ; 5.1 மில். அமெரிக்க டொலர் பெறுமதியான ஒப்பந்தம் கைச்சாத்து 

03 Jun, 2026 | 04:15 PM
image

எல்ல பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சொகுசு விடுதியான 98 ஏக்கர் ரிசோர்ட் - ஸ்பா நிறுவனத்தை விரிவாக்குவதற்காக, இலங்கை முதலீட்டுச் சபை மற்றும் வெல்ல க்ரூப் ஆகியவற்றுக்கு இடையே 5.1 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீட்டு ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது. இது இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு ஒரு பேரூக்கத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எல்ல பகுதியில் உள்ள சிறிய சிவனொளிபாதமலை மற்றும் அதனைச் சூழ காணப்படும் அழகிய காட்சிகளை உள்ளடக்கிய 98 ஏக்கர் தேயிலைத் தோட்டத்தில் அமைந்துள்ள இந்த விடுதி, குறித்த ஒப்பந்தத்தின் ஊடாக மேலும் விரிவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடுதி விரிவாக்கத் திட்டப் பணிகள் 36 மாத காலப்பகுதியில் இரண்டு கட்டங்களாக செயற்படுத்தப்படும்.

இதில் 11 சொகுசு வில்லாக்கள், 32 டீலக்ஸ் அறைகள், ஒரு புதிய உணவகம் மற்றும் சமையலறை, நவீனமயமாக்கப்பட்ட யோகா மற்றும் ஆரோக்கிய மையம் ஆகியவை அமைக்கப்படவுள்ளன.

தெரிவுசெய்யப்பட்ட சில புதிய வில்லாக்களில் பிரத்தியேக சூடாக்கப்பட்ட நீச்சல் குளங்கள் அமைக்கப்படவுள்ளன.

இந்தத் திட்டத்தின் மூலம் ஊவா மாகாணத்தில் சுமார் 150 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பயன்படுத்தப்பட்ட தண்டவாளக் கட்டைகள் (railway sleepers), உள்ளூர் கருங்கற்கள் மற்றும் பாரம்பரிய பொருட்களைக் கொண்டு கட்டப்பட்ட இந்த விடுதி, இயற்கையோடு இணைந்த வடிவமைப்புக்கு பெயர் பெற்றதாகும். 

இவ்விடுதி விரிவாக்கத்தின்போது மின்கலத்தால் இயங்கும் வாகன போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத கட்டடக்கலை முறைகளே தொடர்ந்து பின்பற்றப்படும் என தெரிவிக்கப்படுகிறது. 

ஒன்பது வளைவு பாலம் (Nine Arch Bridge) மற்றும் மலைநாட்டு நடைபயணப் பாதைகளுக்கு அருகில் அமைந்துள்ள இந்த எல்ல பகுதி, இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு சுற்றுலா மையமாகும்.

அத்துடன் இந்த விடுதி விரிவாக்கத் திட்டமானது வெல்ல க்ரூப் நிறுவனத்தின் இரண்டாவது முதலீட்டுத் திட்டம் என கூறப்படுகிறது. 

இந்த முதலீடானது, இலங்கையை உலகளாவிய ரீதியில் ஒரு சிறந்த சொகுசு சுற்றுலாத் தலமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக விரிவாக்கத் திட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர். 

பாரம்பரிய கடற்கரை சுற்றுலாவைத் தாண்டி, வெளிநாட்டுப் பயணிகள் நீண்ட நாட்கள் தங்கிச் செல்லும் வகையிலான உயர்தர சுற்றுலா அனுபவங்களை வழங்குவதற்கு இத்திட்டம் பெரும் பங்களிப்பை வழங்கும் என திட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வழக்கு விசாரணைகள் அதிகரிப்பதே நீதிமன்ற கட்டமைப்பு...

2026-08-14 19:29:50
news-image

மதுரையில் தென்னிந்தியாவிற்கான இலங்கை துணை உயர்ஸ்தானீகர்...

2026-08-14 20:11:09
news-image

எதிர்க்கட்சியை அடக்கும் சக்தி அரசாங்கத்திற்கு இல்லை...

2026-08-14 19:28:23
news-image

கூட்டுறவு முறைமையை சந்தையில் தீவிரமாகச் செயற்படும்...

2026-08-14 19:19:15
news-image

போதைப்பொருள் வர்த்தகம் மூலம் பல கோடி...

2026-08-14 18:21:34
news-image

செஞ்சோலை நினைவுத்தூபி எழுப்பப்படும் ; செஞ்சோலைப்...

2026-08-14 17:51:55
news-image

புதிதாகப் பொறுப்பேற்ற 52ஆவது படைப்பிரிவின் கட்டளைத்...

2026-08-14 18:28:53
news-image

எம் இனத்துக்கு எதிரான இனப்படுகொலைகள் அனைத்துக்கும்...

2026-08-14 18:25:58
news-image

அவசர தேவைகளுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய...

2026-08-14 17:19:31
news-image

2026ஆம் ஆண்டின் சிறந்த இணையத்தளத்துக்கான வெள்ளி...

2026-08-14 18:15:45
news-image

திருமண விழா முடிந்து திரும்பியபோது வெயங்கொடையில்...

2026-08-14 17:41:42
news-image

பூநகரியில் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் காற்றாலைத்...

2026-08-14 19:30:43