நடிகர் ரவி தேஜா நடிக்கும் 'இருமுடி கட்டு' படத்தின் அறிமுக காணொளி வெளியீடு

03 Jun, 2026 | 03:45 PM
image

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ரவி தேஜா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'இருமுடி கட்டு' எனும் திரைப்படத்தின் அறிமுக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஷிவ நிர்வனா இயக்கத்தில் உருவாகி வரும் 'இருமுடி கட்டு' திரைப்படத்தில் ரவி தேஜா, பிரியா பவானி சங்கர், சாய்குமார், பேபி நட்சத்திரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விஷ்ணு ஷர்மா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். சமூக பக்தி திரைப்படமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் வை . ரவிசங்கர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை டி சீரிஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் குல்சன் குமார் மற்றும் பூஷன் குமார் ஆகியோர் வழங்குகிறார்கள்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தயாராகி வரும் 'இருமுடி கட்டு' திரைப்படத்தின் அறிமுக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் ஒரு தந்தைக்கும்- மகளுக்கும் இடையேயான ஆன்மீக ரீதியிலான உணர்வு விவரிக்கப்பட்டிருக்கிறது என்பதும்... மதுப்பழக்கம் குடும்பத்தை எப்படி சிதைக்கிறது என்பதை விவரித்திருப்பதாலும்... அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் இப்படத்தின் அறிமுக காணொளி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படத்தின்...

2026-06-12 17:10:33
news-image

செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் சூரியின் 'மண்டாடி'

2026-06-12 14:30:14
news-image

நடிகர் ஆரி அர்ஜுனன் நடிக்கும் 'பகவான்'...

2026-06-12 14:26:13
news-image

ஹபீபி - திரைப்பட விமர்சனம்

2026-06-12 14:21:02
news-image

ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் 'மூன்றாம் கண்'...

2026-06-11 17:47:30
news-image

நடிகர் கதிர் நடிக்கும் 'லிங்கம்' இணைய...

2026-06-11 17:28:36
news-image

நடிகர் வெற்றி நடிக்கும் 'லட்சுமி காந்தன்...

2026-06-10 15:56:10
news-image

'சம்பவகாரி' யை வெளியிட்ட 'கட்டா குஸ்தி...

2026-06-10 15:50:45
news-image

இயக்குநர் பாரதிராஜாவின் இறுதிச் சடங்கு தேனியில்...

2026-06-10 13:56:51
news-image

பாரதிராஜாவின் உடலுக்கு தமிழக முதல்வர் விஜய்...

2026-06-10 10:44:33
news-image

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் சாதனை வரலாறு

2026-06-10 10:03:22
news-image

இயக்குநர் பாரதிராஜா காலமானார்

2026-06-10 08:59:21