தமிழகத்தில் உள்ள பொருநை நதிக்கரையில் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற அகழாய்வு பணிகளை, ஆவண படைப்புகளாக உருவாக்கி, பொருநை என்ற பெயரில் ஆவண படமாக தயாராகி உள்ளது. இந்த ஆவண திரைப்படம் துருக்கியில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தெரிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஹிப் ஹொப் தமிழா இசை கலைஞராக பணியாற்றி வருவதுடன் 'தமிழன்டா ' என்ற பெயரில் பிரத்யேக சமூக இயக்கத்தையும் முன்னெடுத்து வருகிறார். இந்த இயக்கம் சார்பில் கடந்த 2019 ஆம் ஆண்டில் 'தமிழி' எனும் ஆவணப்பட இணைய தொடர் உருவாக்கப்பட்டு, வெளியிடப்பட்டது. இதற்கு டிஜிட்டல் தள ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனால் உற்சாகமடைந்த தமிழன்டா இயக்கம்- தற்போது தமிழகத்தில் உள்ள தாமிரபரணி நதி என தற்போது வழங்கப்படும் பொருநை நதிக்கரையில் 2020- 21 ஆம் ஆண்டில் அகழாய்வு பணிகள் நடைபெற்றது. இந்த அகழாய்வு பணிகளை முழுமையாக பதிவு செய்து ஆவணப்படமாக உருவாக்கியுள்ளது. இதனை ஹிப் ஹொப் தமிழா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
ஆவணப்பட இயக்குநர்களான பிரதீப் குமார் - இளங்கோ சம்பத்குமார் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள இந்த பொருநை ஆவணப்படத்திற்கு சரண்குமார்- பாலாஜி பாஸ்கரன்- சந்தோஷ் - ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஆவணப்படத்திற்கு பின்னணி குரலுடன் ஹிப் ஹொப் தமிழா இசையமைத்துள்ளார்.
ஆவண படம் குறித்து இயக்குநர்கள் பேசுகையில், '' ஓராண்டு காலம் படப்பிடிப்பு நிகழ்த்தப்பட்டு, அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் மீதான அறிவியல் பூர்வமான ஆய்வு முடிவுகள் வெளிவரும் வரை காத்திருந்து, அதன் பிறகு அனைத்தையும் தொகுத்து 90 நிமிட கால அவகாசம் கொண்ட ஆவண படமாக உருவாக்கப்பட்டுள்ளது': என்றார்.
தற்போது இந்த பொருநை ஆவண திரைப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்கான முயற்சியில் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் துருக்கியில் நடைபெறும் ஃபோகா சர்வதேச தொல்லியல் மற்றும் பாரம்பரிய கலாச்சாரம் சார்ந்த திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு பொருநை தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. உலக அளவில் தொல்லியல் -பண்பாடு- கலாச்சாரம்- ஆகிய துறைகளில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் முதல் தமிழ் மொழியிலான ஆவணப்படம் பொருநை என்பது இதன் சிறப்பம்சமாகும்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM