நடிகர் விஜய் அண்டனி நடிக்கும் 'நூறு சாமி' படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

03 Jun, 2026 | 03:18 PM
image

தமிழ் திரையுலகின் அனைத்து துறைகளின் நெளிவு  சுழிவுகளை அறிந்து வெற்றிகரமான நட்சத்திர கலைஞராக முன்னோக்கிப் பயணிக்கும் விஜய் அண்டனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'நூறு சாமி' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முத்திரை பதித்த படைப்பாளியான சசி இயக்கத்தில் உருவாகியுள்ள 'நூறு சாமி' திரைப்படத்தில் விஜய் அண்டனி , காவ்யா அனில், சுவாசிகா, லஜோமோல் ஜோஸ் , அருள் தாஸ், அஜய் திஷான் ,ஜென்சன் திவாகர், கருணாஸ், முனிஸ்காந்த், பாலாஜி சக்திவேல், சுப்பிரமணியம் சிவா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.  தர்ஷன் கிர்லோஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்துள்ளார். எளிய மனிதரின் வாழ்வியல் பின்னணியில் உணர்வு பூர்வமான திரைப்படமாக தயாராகி இருக்கும் இதனை விஜய் அண்டனி ஃபிலிம் கொர்ப்பரேசன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஃபாத்திமா விஜய் அண்டனி தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை மீரா அண்டனி வழங்குகிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், பாடல்கள் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடத்தில் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் நிலையில் எதிர்வரும் 19 ஆம் திகதியன்று இத்திரைப்படம் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

'பிச்சைக்காரன்' எனும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்த படத்திற்குப் பிறகு மீண்டும் இயக்குநர் சசி - நடிகர் விஜய் அண்டனி கூட்டணி அமைத்திருப்பதால் இந்த 'நூறு சாமி' திரைப்படத்திற்கு ரசிகர்களிடத்திலும் ...திரையுலக வணிகர்களிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right