நீங்கள் எந்த செயலை செய்தாலும் உங்களுடைய விருப்பத்திற்குரிய காரியத்தில் ஈடுபட்டாலும் மன துணிவு அல்லது அசட்டு தைரியம் இல்லை என்றால்.. அந்த வேலையில் முழுமையாக ஈடுபட இயலாது. அதன் பலனும் நிறைவை தராது. இதனால் தான் எம்முடைய முன்னோர்கள் 'அகத்தைக் காட்டும் முகம்' என குறிப்பிடுவார்கள்.
நீங்கள் எதை நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ...! அதை வெளிப்படுத்துவது தான் முகம். இந்தத் தருணத்தில் நீங்கள் மனதில் அச்சம் கொண்டிருந்தால்.. அது உங்களது முகத்தில் பிரதிபலிக்கச் செய்யும். அதனை இந்த பிரபஞ்சம் உட்கிரகித்து உங்களுக்கான உளவியல் வலிமையை வழங்க தயாராகிறது.
உளவியல் ரீதியாக பலவீனமடைந்தவர்களால் எந்த ஒரு செயலையும் முழுமையாக நிறைவேற்றிட இயலாது. அனுபவம் - திறமை - வாய்ப்பு - கிடைத்தாலும் உள்ளத்தில் அச்சம் இருந்தால் ..அதனை முழுமையாக பாவிக்க இயலாது. இதனால்தான் மனதின் தைரியம் - மன துணிச்சல் - ஆகியவை ஒவ்வொருவருக்கும் ஆயுள் முழுவதும் அவசியம் என எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள்.
இன்றைய சூழலில் எம்மில் பலருக்கும் கடின உழைப்பின்றி அனைத்தும் கிடைப்பதால்.. சோம்பல் அதிகமாகி ,உளவியல் ரீதியிலான வலிமையை இழக்கத் தொடங்குகிறார்கள். இந்நிலையில் சூழல் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ மன தைரியத்தை இழந்து.. மனம் முழுவதும் பயத்தை சுமந்து கொண்டிருந்தால்... அதனை அகற்றுவதற்கான பிரத்யேக வழிமுறையை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
மனதில் அச்சம் இருக்கிறது. அதனை மறைந்து போகச் செய்யும் வழிமுறை தெரியவில்லை என்றால்... ஒரு ஞாயிற்றுக்கிழமையை தெரிவு செய்து சூரிய உதய தருணத்தில் 'சிவாய நமக'- 'ஓம் நமச்சிவாய' என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே.. அருகில் இருக்கும் அல்லது தெரிந்த இடத்தில் இருக்கும் வில்வ மரத்திலிருந்து வில்வ இலையை பறித்து, அதனை தூய்மைப்படுத்தி சாப்பிட தொடங்குங்கள். அப்படியே இலையுடன் சாப்பிட தயக்கம் கொண்டிருப்பவர்கள்... வில்வ பொடியை உங்களுக்கு ஏற்ற வகையில் நீரில் கரைத்து அருந்தலாம். நாளாந்தம் இந்த நீரை சிறிதளவு காலை அல்லது மாலை வேளையில் பருகத் தொடங்கினால்... மனதில் இருந்து அச்சம் மறைய தொடங்குவதையும், துணிச்சல் ஏற்பட தொடங்குவதையும் அவதானிக்கலாம்.
மேலும் இதனைத் தொடர்ந்து சித்தர்களில் தலைமை என்று குறிப்பிடப்படும் அகத்தியரை வியாழக்கிழமைகளில் தீபமேற்றி வழிபட தொடங்குங்கள். ஸ்ரீ அகத்தியரை வணங்கிட வணங்கிட உங்களுடைய மனதின் அச்சம் விலகி, மனம் உறுதி அடைந்து, சாதனையை படைப்பதற்கான துணிச்சலை பெற்றிருப்பீர்கள்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM