மெட்டபொலிக் என்செபலோபதி ஹைபோநெட்ரீமியா எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

03 Jun, 2026 | 03:08 PM
image

எம்முடைய இல்லங்களில் உள்ள முதியவர்கள் திடீரென்று நிலை தடுமாறி கீழே விழக்கூடும் அல்லது விவரிக்க இயலாத அளவிற்கு குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டால்.. அவர்களுடைய உடலில் மருத்துவ மொழியில் மெட்டபொலிக் என்செபலோபதி ஹைபோநெட்ரீமியா என குறிப்பிடப்படும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என அவதானிக்கலாம். இத்தகைய பாதிப்பிற்கு தற்போது உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு நவீன சிகிச்சைகளை வழங்கி நிவாரணம் அளிக்க முடியும் என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.

எம்முடைய மூளையின் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றம் தான் இத்தகைய பாதிப்பிற்கு காரணமாகும். இதன் போது குழப்பம், நினைவாற்றல் இழப்பு .. போன்றவை முதன்மையான பாதிப்பாக இருக்கும் என்பதால் இதன் அறிகுறிகள் தெரிந்தவுடன் அவசர நிலை என கருதி உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்.

எம்முடைய உடலில் நாம் பசியாறும் உணவும், அருந்தும் திரவ பொருட்களும் ஆற்றலாக மாற்றும் ஒரு வேதியல் செயல்முறை தான் வளர்ச்சிதை மாற்றம் என குறிப்பிடுகிறோம். இத்தகைய வளர்ச்சிதை மாற்றத்தில் ஏற்படும் சமசீரற்ற நிலையின் காரணமாக மூளை பகுதி பாதிக்கப்படுகிறது. சிலருக்கு இத்தகைய பாதிப்பை கவனியாது விட்டால்.. உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திவிடும்.

குழப்பம், நினைவுத்திறன் குறைவு, எரிச்சல், பதட்டம், சோர்வு ,மாயத் தோற்றங்கள், நடுக்கங்கள், சுவாசத்திணறல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால்.. மெட்டபொலிக் என்செபலோபதி ஹைபோநெட்ரீமியா என்ற பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும்.‌ இத்தகைய தருணத்தில் உடலுக்கு தேவையான சோடியம் எனும் தாது பொருட்களின் அளவு இயல்பான அளவை விட அதிகளவில் குறைவதால் ஏற்படும் நிலையாகும்.

சிலருக்கு சிறுநீரக கோளாறு, கல்லீரல் தொடர்பான பாதிப்பு, இதயம் தொடர்பான பாதிப்பு மற்றும் நீர் சத்து இழப்பின் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். இவர்களுக்கு வைத்தியர்கள் உடனடியாக  பிரத்யேக குருதி பரிசோதனையை மேற்கொண்டு, பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து, நவீன மருத்துவத் தொழில்நுட்பங்களுடன் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை வழங்கி நிவாரணம் அளிப்பர்.

வைத்தியர் பிகாஷ் தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கன்ஸ்டிரிக்டிவ் பெரிகார்டிடிஸ் எனும் இதய பாதிப்பிற்கான...

2026-06-12 14:16:00
news-image

அஸ்பெர்கில்லோமா எனும் நுரையீரல் பாதிப்பிற்குரிய நவீன...

2026-06-11 17:22:11
news-image

உடற்பருமனால் பாதிக்கப்படும் வளரிளம் பருவத்தினரின் எண்ணிக்கை...

2026-06-10 16:00:56
news-image

க்யூபிடல் டன்னல் சிண்ட்ரோம் எனும் முழங்கை...

2026-06-09 18:18:06
news-image

இதய செயலிழப்பு பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் இம்பெல்லா...

2026-06-09 07:16:20
news-image

புரோஸ்டேட் சுரப்பி வீக்க பாதிப்பிற்கான நவீன...

2026-06-08 17:01:59
news-image

அயோட்டிக் டிஸ்சக்சன் எனும் இதய ரத்த...

2026-06-05 16:14:23
news-image

தழும்புகளற்ற தைரொய்க்டொமி எனும் நவீன சத்திர...

2026-06-04 17:33:23
news-image

மெட்டபொலிக் என்செபலோபதி ஹைபோநெட்ரீமியா எனும் பாதிப்பிற்குரிய...

2026-06-03 15:08:28
news-image

தனிமை அதிகமானால் குருதி அழுத்த பாதிப்பும்...

2026-06-02 17:55:09
news-image

நார்த்திசு கட்டிகளை அகற்றுவதற்கான நவீன சிகிச்சை

2026-06-01 14:38:53
news-image

தேசிய வைத்தியசாலையில் ரூ.99 மில்லியன் செலவில்...

2026-06-01 04:59:15