டெல்லி உணவு விடுதியில் பாரிய தீ! ; 21 பேர் பலி ; இந்திய பிரதமர் மோடி இரங்கல் 

03 Jun, 2026 | 03:16 PM
image

இந்தியாவின் டெல்லியில் உணவு விடுதியொன்றில் இன்று புதன்கிழமை (3) காலை இடம்பெற்ற தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளதோடு, இழப்பீட்டுத் தொகை உதவிகள் தொடர்பாகவும் அறிவித்திருக்கிறார்.  

மாளவியா நகரில் உள்ள உணவு விடுதியில் இன்று காலை 9.40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து, தகவலறிந்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளில் விரைந்து செயற்பட்டுள்ளனர். 

விபத்தில் சிக்கி காயமடைந்த 37 பேர் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

முதற்கட்டமாக இந்த தீயில் சிக்கி 10 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர், தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

தீ பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. 

உயிரிழந்தவர்களில் மத்திய ஆசியா, ஆபிரிக்கா நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். 

இந்நிலையில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

“காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் வழங்குவார்கள்” என மோடி பதிவிட்டுள்ளார். 

அதன்படி, பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 இலட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

3 ஆண்டுகளுக்கும் மேலாக கோமாவில் இருந்த...

2026-06-12 10:41:55
news-image

ஈரானுடனான ‘அதிமுக்கிய உடன்பாடு’ எட்டப்பட்டது –...

2026-06-12 07:12:21
news-image

ஈரான் மீது இன்று இரவு கடுமையான...

2026-06-11 23:56:01
news-image

வட அயர்லாந்தில் தொடரும் வன்முறை: 12...

2026-06-11 16:20:43
news-image

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்...

2026-06-11 16:41:25
news-image

சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை: அவுஸ்திரேலியாவைத்...

2026-06-11 12:26:19
news-image

ஹோர்முஸ் நீரிணை முற்றிலும் மூடப்பட்டது: ஈரான்...

2026-06-11 10:13:07
news-image

குவைத் வான்பரப்பு தற்காலிகமாக மூடப்பட்டது

2026-06-11 09:48:55
news-image

ஓமான் வளைகுடாவில் பயணித்த எண்ணெய் கப்பல்...

2026-06-11 09:43:52
news-image

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து:...

2026-06-10 22:11:30
news-image

டெல்லியில் ராகுல் காந்தி, சோனியா காந்தியை...

2026-06-10 19:18:10
news-image

ஈரான் நகரங்களில் அமெரிக்கா தாக்குதல் ;...

2026-06-10 13:18:08