ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் 2026 - 2027க்கான தேசிய வீரர்கள் ஒப்பந்தத்தில் 46 வீரர்கள்

03 Jun, 2026 | 02:51 PM
image

(நெவில் அன்தனி)

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின்   2026 - 2027 பருவகாலத்திற்காக   தேசிய வீரர்கள் ஒப்பந்தத்தில்   46 வீரர்கள்  இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

விஜயகாந்த் வியாஸ்காந்த், லசித் குரூஸ்புள்ளே, காமில் மிஷார, இசித்த விஜேசுந்தர, வனுஜ சொஹான், டிலும் சுதீர, தரிந்து ரத்நாயக்க ஆகிய வீரர்கள் தேசிய வீரர்கள் ஒப்பந்தத்தில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஐபிஎல் இல் விளையாட தனக்கு ஆட்சேபனை இல்லை என்ற சான்றிதல் வழங்காமல் இருந்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து பின்னர் வாபஸ் பெற்ற வேகபந்ந்துவீச்சாளரும் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெறுகிறார். 

ஒப்பந்த காலம் 2026 ஏப்ரல் 1ஆம் திகதியிலிருந்து 2027 மார்ச் 31ஆம் திகதிவரையாகும்.

தேசிய அணிகளில் இருக்க வேண்டிய ஆற்றல் வெளிப்பாடு, நிலையான திறமை வெளிப்பாடு, உடற்தகுதி, திறன் மற்றும் மூலோபாய தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் வீரர்கள் ஏ1, ஏ2, பி1, பி2, பி3 மற்றும் மத்திய ஒப்பந்தம் ஆகிய அடுக்குகளில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்னர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் விளையாட்டின் மிக உயர்ந்த மட்டத்தில் செயல்படுவதற்குத் தேவையான ஆதரவு, கட்டமைப்பு மற்றும் வளங்கள் வழங்கப்படுவதையும், அதேவேளை, நாட்டில் கிரிக்கெட்டின் நீண்டகால வளர்ச்சிக்குப் பங்களிப்பதையும் இந்த ஒப்பந்தங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன.

ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வீரர்கள்

குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, தினேஷ் சந்திமால், வனிந்து ஹசரங்க, பெத்தும் நிஸ்ஸங்க, சரித் அசலன்க, கமிந்து மெண்டிஸ், துஷ்மன்த சமீர, அசித்த பெர்னாண்டோ, தசுன் ஷானக்க, மஹீஷ் தீக்ஷன, ஜனித் லியனகே, துனித் வெல்லாலகே, நிரோஷன் டிக்வெல்ல, ஜெவ்ரி வெண்டசே, பிரபாத் ஜயசூரிய, விஷ்வ பெர்னாண்டோ, மதீஷ பத்திரண, டில்ஷான் மதுஷன்க, பவன் ரத்நாயக்க, ஏஷான் மாலிங்க, மிலன் ரத்நாயக்க, லஹிரு குமார, கசுன் ராஜித்த, அவிஷ்க பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, ரமேஷ் மெண்டிஸ், காமில் மிஷார, பினுர பெர்னாண்டோ, நுவன் துஷார, சொனால் தினுஷ, சஹான் ஆராச்சிகே, ப்ரமோத் மதுஷான், லசித் குரூஸ்புள்ளே, லஹிரு உதார, நுவனிது பெர்னாண்டோ, விஜயகாந்த் வியாஸ்காந்த், இசித்த விஜேசுந்தர, நிஷான் மதுஷ்க, அக்கில தனஞ்சய, சாமிக்க கருணாரட்ன, பசிந்து சூரியபண்டார, மொஹமத் ஷிராஸ், வனுஜ சஹான், திலும் சுதீர, தரிந்து ரத்நாயக்க. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பூட்டானுக்கு எதிரான வெற்றியானது சாவ் தங்கத்துக்கு...

2026-06-08 22:05:31
news-image

மே. தீவுகள் பயிற்சியக அணிக்கு எதிரான...

2026-06-08 20:26:35
news-image

அறிமுக வீரர் சுதார் அபார பந்துவீச்சு;...

2026-06-08 20:08:37
news-image

பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் ஒற்றையர் ஆடவர்...

2026-06-08 15:12:04
news-image

லண்டன் வோட்டர்லூ பாலத்தில் மகளிர் ரி20...

2026-06-08 13:38:36
news-image

மே.தீவுகளுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் மந்தகதி...

2026-06-06 21:29:49
news-image

மேற்கிந்திய மண்ணில் 23 வருடங்களின் பின்னர் ...

2026-06-06 21:28:16
news-image

நியூ சண்டிகாரில் நடைபெறும் அங்குரார்ப்பண டெஸ்டில்...

2026-06-06 21:23:17
news-image

தே.வி.விழா நகர்வல ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில்...

2026-06-06 17:29:28
news-image

முன்னாள் தேசிய வீரர் மற்றும் பயிற்றுநர்...

2026-06-05 20:29:40
news-image

இளம் புயல் சூரியவன்ஷி அடங்கிய இந்திய...

2026-06-05 17:37:00
news-image

பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுடனான சந்திப்பில் சங்கக்கார...

2026-06-05 17:37:00