தித்வா சூறாவளி பாதித்த மக்களுக்கு தற்காலிக வீடுகள், முப்படையினரின் உதவியுடன் பணிகள் தீவிரம்

03 Jun, 2026 | 02:47 PM
image

(செ.கவிஷனா)

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டு தற்காலிகக் கூடாரங்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு அவர்களின் தனிப்பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளுடன் கூடிய முறையான தற்காலிக வீடுகளை அமைத்துக் கொடுக்கும் பணிகள் முப்படையினரின் உதவியுடன் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர், வைத்தியர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (02) விசேட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டு தற்காலிக கூடாரங்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு அவர்களின் தனிப்பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளுடன் கூடிய முறையான தற்காலிக வீடுகளை அமைத்துக் கொடுக்கும் பணிகள் முப்படையினரின் உதவியுடன் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, முழுமையாக பாதிக்கப்பட்ட ஒரு வீட்டிற்கு 50 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கு மதிப்பீடு இன்றி ஆரம்பகட்டமாக 5 இலட்சம் ரூபா வரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு வீட்டின் சேதம் 5 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமாக காணப்படின் அது முறையாக மதிப்பீடு செய்யப்பட்டு அதிகபட்சமாக 5 இலட்சம் ரூபா வரை இழப்பீடு வழங்கப்படும்.

இதேவேளை, பகுதி அளவில் சேதமடைந்த வீடுகளுக்கான 5 இலட்சம் ரூபா இழப்பீடானது 2 கட்டங்களாக வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக 3 இலட்சம் ரூபாவும் அத்தொகையைக் கொண்டு மேற்கொள்ளப்படும் திருத்தப் பணிகளை தொடர்ந்து எஞ்சிய 2 இலட்சம் ரூபாவும் வழங்கப்படும். இதற்காகப் பயனாளிகள் தமது திருத்தப் பணிகள் குறித்த விபரங்களை பிரதேச செயலகங்களுக்கு எழுத்து மூலம் சமர்ப்பிக்க வேண்டும். இதுவரை சுமார் 6000 வீடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

நிலச்சரிவு அபாயம் கொண்ட அல்லது வசிக்கத் தகுதியற்ற அவதானம் கூடிய வலயங்களில் அமைந்துள்ள வீடுகள் பகுதியளவில் சேதமடைந்திருந்தாலும் அவை முழுமையாக பாதிக்கப்பட்ட வீடுகளாகவே கருதப்படும். இவ்வாறான குடும்பங்களை மீண்டும் அதே இடங்களில் குடியமர்த்த முடியாது   என்பதால் அவர்களுக்கு அரசாங்கத்தினால் காணிகள் வழங்கப்பட்டு வீடமைக்க 50 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கப்படும். சில குடும்பங்கள் தமக்கு விருப்பமான இடங்களில் வீடுகளை வாங்கவும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தற்போது வரை 1000 இற்கும் மேற்பட்ட முழுமையாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ஆரம்பக் கட்ட கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் சுமார் 25000 பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் இந்த நடைமுறைகளில் சிறு சிக்கல்கள் காணப்பட்டது. பிரதேச செயலகங்களின் ஊடாகவே பாரியளவில் இந்நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.

இடையில், அஸ்வெசும திட்ட மீளாய்வு பணிகள், எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பான கடமைகள் மற்றும் மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ஏற்பட்ட சில பொருளாதார தாக்கங்கள் காரணமாக பணியாளர்கள் அதிக வேலைப்பளுவுக்கு உள்ளானதே இந்த தாமதத்துக்கு காரணமாகும். இருப்பினும் தற்போது இந்த இழப்பீடு வழங்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுரேஷ் சலேயின் கடந்த கால சேவையைக்...

2026-06-08 15:30:16
news-image

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைப் பாதுகாக்க முன்னின்ற...

2026-06-08 14:01:15
news-image

சுரேஷ் சலேவை விடுவிக்கக் கோரி சத்தியாகிரக...

2026-06-08 16:09:10
news-image

அரசியலுக்குப் பலிகொடுக்க மாட்டேன்; இராணுவத்திற்கு பிள்ளைகளை...

2026-06-08 16:02:06
news-image

கரப்பான் பூச்சி, எலியைக் கண்டால் நடுங்கும்...

2026-06-08 17:34:53
news-image

உடல்நிலை மோசம்; உயில் எழுதத் தயார்:...

2026-06-08 17:25:22
news-image

டொலர் உயர்வால் மக்கள் மீதே கடன்...

2026-06-08 20:38:26
news-image

செம்மணி புதைகுழி அகழ்வில் சிறுவர்களின் எலும்புக்கூடுகள்...

2026-06-08 19:24:40
news-image

விகாரையிலிருந்து திருடப்பட்ட புராதன புத்தர் சிலையுடன்...

2026-06-08 18:28:03
news-image

மூன்று நாட்கள் விசேட டெங்கு ஒழிப்பு...

2026-06-08 18:31:32
news-image

உயிர்த்த ஞாயிறு விசாரணைக்கு கம்மன்பில, விமல்,...

2026-06-08 18:16:45
news-image

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 3...

2026-06-08 17:41:30