சர்வதேச அளவில் கட்டாய உழைப்பைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பொருட்களின் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய 60 நாடுகளுக்கு எதிராக 10% அல்லது 12.5% மேலதிக இறக்குமதி வரிகளை விதிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் செவ்வாய்க்கிழமை (02) உத்தியோகபூர்வமாகப் பரிந்துரைத்துள்ளது.
குறித்த நாடுகள் கட்டாய உழைப்பைத் தடுக்கத் தவறியமையானது நியாயமற்றது எனவும், அது அமெரிக்க வர்த்தகத்தைப் பெருமளவில் கட்டுப்படுத்துகிறது எனவும் கண்டறியப்பட்டதை அடுத்தே அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியின் அலுவலகம் இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்திருந்த அவசரகால வரிகளை கடந்த பெப்ரவரி மாதத்தில் அமெரிக்க உயர் நீதிமன்றம் இரத்து செய்திருந்தது. இந்நிலையில், வீழ்த்தப்பட்ட தங்களின் அவசரகால வரிக் கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் ட்ரம்ப் நிர்வாகம் மேற்கொண்டு வரும் 'பிரிவு 301' நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் தொடர்பான விசாரணையின் சமீபத்திய கண்டுபிடிப்பாக இந்த புதிய வரிக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகத்தின் அறிவிப்பின்படி, கட்டாய உழைப்பு விவகாரம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் பின்வரும் 15 நாடுகளுக்கு 10% மேலதிக வரி விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கனடா, மெக்சிகோ, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தோனேசியா, மலேசியா, தாய்வான், ஆர்ஜென்டீனா , எக்குவடோர் , கம்போடியா, எல் சல்வடோர் மற்றும் குவாத்தமாலா ஆகிய நாடுகள் அடங்குகின்றனர்.
இது தவிர, இந்த விசாரணக்கு உட்படுத்தப்பட்ட ஏனைய எஞ்சிய 45 நாடுகளுக்கு 12.5% மேலதிக வரிகளை விதிக்க வர்த்தக நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் விடுத்துள்ள காரசாரமான அறிக்கையில்,
"எங்களின் மிக முக்கியமான வர்த்தகப் பங்காளிகள், கட்டாய உழைப்பின் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதியைத் தடுக்கத் தவறியமையை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்தச் சூழல், அமெரிக்கத் தொழிலாளர்களை உலகளாவிய ரீதியில் ஒரு சமமற்ற களத்தில் போட்டியிடக் கட்டாயப்படுத்தும் ஒரு மோசமான நிலையை உருவாக்குகிறது."
அத்துடன், ஆடை மற்றும் புடவை இறக்குமதிகள் ஒரு குறிப்பிட்ட அளவு வரை குறைக்கப்பட்ட வரி விகிதத்தில் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு அனுமதிக்கும் ஒரு 'புடவை தொழிற்துறை பொறிமுறை' ஒன்றையும் அமெரிக்க வர்த்தக பரிந்துரைத்துள்ளது. எனினும், அதற்கான வரிகள் மற்றும் பொருட்களின் அளவு குறித்த விபரங்கள் இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. எனக் குறிப்பிட்டுள்ளார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM