கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றிய பின்னர் தமிழக அரசியலில் முக்கிய முகமாக அரசியல்வாதியாக உருவெடுத்துள்ள குப்புசாமி அண்ணாமலையின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு ஊகங்கள் வெளியாகி வருகின்றன.
சென்னையில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய “புதிய கட்சி தொடங்கப் போகிறீர்களா?” என்ற கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, “இன்னும் இரண்டு நாட்களில் அனைத்தையும் பற்றி பேசுகிறேன்” என தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவரது அரசியல் எதிர்காலம் தொடர்பான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், ஜூன் 2ஆம் திகதி அமித்ஷா டெல்லியில் அண்ணாமலை சந்தித்தமை அரசியல் வட்டாரங்களில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர் தற்போதைய அரசியல் பாதையிலேயே தொடர்வாரா அல்லது புதிய அரசியல் முயற்சியை மேற்கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த காலத்தில் கட்சிக்கு அதிக கவனத்தை ஈர்த்துள்ளார். பின்னர் அவர் அந்தப் பதவியில் இருந்து விலகிய நிலையில், சமீபத்திய சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவர் தனிக்கட்சி தொடங்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
2011ஆம் ஆண்டு கர்நாடகா ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்வான அவர், கார்கலா, உடுப்பி, சிக்மகளூர் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை பொறுப்புகளை வகித்தார். 2019ஆம் ஆண்டு தனது காவல்துறைப் பணியில் இருந்து விலகிய அவர், பின்னர் தமிழ்நாட்டில் சமூக மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டார்.
2020ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த அண்ணாமலை, விரைவிலேயே மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். 2021ஆம் ஆண்டு அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த போதிலும், அதே ஆண்டில் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றார். அதன் பின்னர் தமிழக அரசியலில் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
அண்ணாமலை தனது அடுத்த அரசியல் முடிவை விரைவில் அறிவிக்கவுள்ளதாக கூறியுள்ள நிலையில், தமிழக அரசியல் களத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM