(நெவில் அன்தனி)
புதிய தலைவர், புதிய பயிற்றுநர் ஆகியோரின் கீழ் இலங்கை விளையாடவுள்ள முதலாவது மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக கிங்ஸ்டன் சபினா பார்க் விளையாட்டரங்கில் நாளை இரவு நடைபெறவுள்ள முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது.
இந்த தொடரின் மூன்று போட்டிகளும் சபினா பாரக் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
தென் ஆபிரிக்காவிலும் ஸிம்பாப்வேயிலும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் உலகக் கிண்ணப் போட்டிக்கான (50 ஓவர்) தகுதிகாண் சுற்றாகவும் இத் தொடர் அமைவதால் இரண்டு அணிகளுக்கும் இந்தத் தொடர் முக்கியம் வாய்ந்ததாக அமையவுள்ளது.

இந் நிலையில், புதிய தலைமைத்துவம் புதிய பயிற்றுநரின் கீழ் தேசிய கிரிக்கெட் அணியின் முன்னேற்றத்தை நோக்கிய ஒரு பெரிய மாற்றம் நிகழும் என குசல் மெண்டிஸ் கருதுகிறார்.
'புதிய பயிற்றுநர் கெரி கேர்ஸ்டனின் பயிற்றுவிப்பின் கீழ் சுமார் 3 வாரங்கள் இலங்கை குழாத்துடன் நான் கடும் பயிற்சியில் ஈடுபட்டேன். பயிற்றுநர் குழாத்தினால் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது' என மேற்கிந்தியத் தீவுகளுக்கு புறப்படுவதற்கு முன்னர் அணித் தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்திருந்தார்.
'இந்திய அணியின் பயிற்றுநராக இருந்த எமது புதிய தலைமைப் பயிற்றுநருக்கு (கெரி கேர்ஸ்டன்) நிறைவான அனுபவத்துடன் எமக்கு இலகுவாக பயிற்சி அளிக்கக்கூடியதாக இருக்கும். ஆனால், வீரர்கள் என்ற வகையில் 100 வீதம் கடுமையாக பயிற்சியில் ஈடுபடவேண்டி இருப்பதுடன் போட்டிகளின்போது அதீத ஆற்றலை வெளிப்படுத்த வேண்டிய கடமை எமக்கு இருக்கிறது' என அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஒரு சிறந்த போட்டி வியூகத்துடன் மேற்கிந்தியத் தீவுகளை எதிர்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.
'மேற்கிந்தியத் தீவுகளின் சூழ்நிலைகள், ஆடுகளத்தின் தன்மைகள் என்பன எமது நாட்டைவிட மாறுபட்டவை. எனவே அங்குள்ள சூழலுக்கும் தன்மைக்கும் எங்களை மாற்றிக்கொண்டு விளையாடவுள்ளோம். மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள ஆடுகளங்களின் தன்மைகளை நாங்கள் அறிவோம். எனவே அதற்கேற்ப எங்களைத் தயார்படுத்திக்கொண்டு வெற்றி பெற முயற்சிப்போம். எங்களிடம் உள்ள திறமை மற்றும் பலத்தைக் கொண்டு எவ்வாறு விளையாட வேண்டும் என நாங்கள் தீர்மானித்துவிட்டோம்' என குசல் மெண்டிஸ் மேலும் தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க, நான்கு வருடங்களுக்கு முன்னர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் மேற்கிந்தியத் தீவுகள் வீழ்ச்சி அடைந்திருந்ததால் இந்தியாவில் 2023இல் நடைபெற்ற ஐசிசி உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட தகுதிபெறவில்லை.

ஆனால், அண்மைக் காலமாக ஒருநாள் கிரிக்கெட்டில் வெகுவாக முன்னேறிவரும் மேற்கிந்தியத் தீவுகள் அடுத்த உலகக் கிண்ணத்தில் விளையாடுவதற்கான தகுதியைப் பெற கடுமையாக முயற்சிக்கவுள்ளது.
இதன் காரணமாக இலங்கை அணி இந்தத் தொடரில் பலத்த சவாலை எதிர்கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்தத் தொடரை முன்னிட்டு மேற்கிந்தியத் தீவுகள் பலம்வாய்ந்த குழாத்தை பெயரிட்டுள்ளது.
உபாதை காரணமாக சில காலம் விளையாடாமல் இருந்த ஷாய் ஹோப் மீண்டும் தலைவராக குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

அணிகள்
முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியில் பெரும்பாலும் பெத்தும் நிஸ்ஸன்க, காமில் மிஷார, குசல் மெண்டிஸ் (தலைவர்), பவன் ரத்நாயக்க, சரித் அசலன்க, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே, துஷ்மன்த சமீர, அசித்த பெர்னாண்டோ அல்லது டில்ஷான் மதுஷன்க ஆகியோர் விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கிந்தியத் தீவுகள் குழாத்தில் ஷாய் ஹோப் (தலைவர்), அக்கீம் ஒகஸ்டே, ஜோன் கெம்பெல், கீஸி கார்ட்டி, ரொஸ்டன் சேஸ், மெத்யூ ஃபோர்ட், ஜஸ்டின் க்றீவ்ஸ், ஷிம்ரன் ஹெட்மயர், அமிர் ஜங்கூ, அல்ஸாரி ஜோசப், ஷமர் ஜோசப், குடாகேஷ் மோட்டி, ஷேர்ஃபேன் ரதர்ஃபர்ட், ஜேடன் சீல்ஸ், ஷமார் ஸ்ப்ரிங்கர் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM