(நெவில் அன்தனி)
இங்கிலாந்திலும் வேல்ஸிலும் இந்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கான இலங்கை குழாத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்ட தினத்தன்றே உபாதைக்குள்ளான துரதிர்ஷ்டசாலி ஆனார் ஷஷனி கிம்ஹானி.
இரண்டு கைகளாலும் பந்துவீசக்கூடியவர் என்றும் இந்த வருட உலகக் கிண்ணத்தில் ஜமாய்க்கக்கூடியவர் என்றும் விபரிக்கப்பட்ட ஷஷினி கிம்ஹானி, இலங்கை மகளிர் அணி இங்கிலாந்து செல்வதற்கு முன்னர் துரதிர்ஷ்டவசமாக குழாத்திலிருந்து நீக்கப்பட்டார்.
இரண்டு தினங்களுக்கு முன்னர் ஷஷினி உபாதைக்குள்ளானதாக இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்து செவ்வாய்க்கிழமை மாலை தெரிவித்தார்.
'ஷஷினியின் முதுகுப் புறத்தில் ஏற்பட்ட உபாதை காரணமாக இலங்கை குழாத்திலிருந்து கடைசி நேரத்தில் நிக்கப்பட்டார். அவரது உபாதை தொடர்பாக வைத்தியர்கள் மருத்துவ பரிசோதனைகளை நடத்தினர்.. ஸ்கான் மூலம் அவரது முதுகுப் புறத்தில் ஏற்பட்ட உபாதை பாரதூரமானது என கண்டறிந்த வைத்தியர்கள் அவருக்கு ஓய்வு வழங்குமாறு அறிவுறுத்தினர். இதற்கு அமைய அவருக்கு ஓய்வுகொடுக்க தெரிவாளார்கள் தீர்மானித்தனர். அவரை உபாதையுடன் விளையாடவைத்து மேலும் அவரை நோய்வாய்ப்படுத்தி அவரது கிரிக்கெட் வாழ்க்கையைப் பாழாக்க விரும்பவில்லை.
'ஷஷினி கிம்ஹானி ஒரு சிறந்தபந்துவீச்சாளர். அவர் விரைவில் குணமடைந்து இலங்கை அணியில் இடம்பெறவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. இரண்டு கைகளாலும் பந்துவீசக்கூடிய 17 வயதான ஷஷினி, எதிர்காலத்தில் இலங்கை அணிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கி முழு கிரிக்கெட் உலகை தன் வசம் கவர்ந்திழுப்பார் என நம்புகிறேன். மகளிர் கிரிக்கெட்டில் சைனமன் முறைமையில் பந்து வீசவது அரிது. அவர் அணியில் இடம்பெற்றிருந்தால் அணிக்கு பெரிய சொத்தாக இருந்திருப்பார். அவர் அணியில் இல்லாதது துரதிர்ஷ்டவசமாகும். அவருக்கு பதிலாக வேகப்பந்துவீச்சாளர் சேத்தனா விமுக்தி அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்' என சமரி அத்தபத்து குறிப்பிட்டார்.
செத்தானா விமுக்தியை அணியில் இணைப்பதற்கு ஐசிசி தொழில்நுட்பக் குழு அங்கீகாரம் வழங்கவேண்டும்.
இலங்கை குழாம்
சமரி அத்தபத்து (தலைவி), ஹசினி பெரேரா, விஷ்மி குணரட்ன, ஹர்ஷித்தா சமரவிக்ரம, இமேஷா துலானி, நிலக்ஷிக்கா சில்வா, கவீஷா டில்ஹாரி, ஹன்சிமா கருணாரத்ன, கௌஷினி நுதியங்கனா, சுகந்திக்கா தசநாயக்க, நிமாஷா மதுஷானி, சேத்தனா விமுக்தி, காவியா காவிந்தி, மல்கி மதாரா, மிதாலி அயோத்யா.
இலங்கையின் போட்டிகள்
ஜூன் 12 எதிர் இங்கிலாந்து - பேர்மிங்ஹாம்
ஜூன் 16: எதிர் நியூஸிலாந்து - சவுத்ஹாம்டன்
ஜூன் 21: எதிர் மேற்கிந்தியத் தீவுகள் - ப்றிஸ்டல்
ஜூன் 23: எதிர் அயர்லாந்து - ப்றிஸ்டல்
ஜூன் 26: எதிர் ஸ்கொட்லாந்து - மென்ச்செஸ்டர்

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM