கொழும்பில் கோலாகலமாக நடைபெறவுள்ள 2026 டிராகன் படகு கலாசார விழா

02 Jun, 2026 | 06:20 PM
image

சீனாவின் பாரம்பரிய டிராகன் படகு கலாசார விழாவை முன்னிட்டு, விளையாட்டு, கலாசாரம் மற்றும் உணவுப் பாரம்பரியத்தை ஒருங்கிணைக்கும் 2026 டிராகன் படகு கலாசார விழா மற்றும் சீனா – இலங்கை நட்புறவுக் கிண்ண டிராகன் படகு போட்டி எதிர்வரும் 13ஆம் திகதி கொழும்பு போர்ட் சிட்டி பீச் பிளாசாவில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வை இலங்கைக்கான சீனத் தூதரகம் மற்றும் இலங்கை இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. 

தேசிய கெனோயிங் மற்றும் கயாக்கிங் சங்கம் (NACKSL), இலங்கைக்கான சீன கலாசார மையம், இலங்கை வெளிநாட்டு சீனர்கள் சங்கம், இலங்கைக்கான சீன வர்த்தக சம்மேளனம், சீன சர்வதேச கலாசார பரிமாற்ற மற்றும் சுற்றுலா மேம்பாட்டு மையம் மற்றும் ருகாவோ பொம்மலாட்டக் கலைக்குழு ஆகியவை இணை ஏற்பாட்டாளர்களாக செயல்படுகின்றன.

நிகழ்வில் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் (Qi Zhenhong) மற்றும் இலங்கை இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோர் கலந்துகொண்டு டிராகன் படகு போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு விருதுகளை வழங்கவுள்ளனர்.

அத்துடன், இலங்கைப் பிரதமர், அமைச்சர்கள் மற்றும் இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்வின் போது பல்வேறு பிரிவுகளுக்கான டிராகன் படகு வேகப்போட்டிகள் நடைபெறவுள்ளன. மேலும், சீனாவின் பாரம்பரிய கலை மரபை பிரதிபலிக்கும் வகையில் ருகாவோ பொம்மலாட்டக் கலைக்குழுவின் சிறப்பு நிகழ்ச்சி மற்றும் இலங்கை இராணுவத்தினரின் ஆச்சரிய நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.

இந்நிகழ்ச்சிகள் சீன கலாசாரத்தின் தனித்துவத்தையும், சீனா–இலங்கை கலாசார பரிமாற்றத்தின் வலிமையையும் வெளிப்படுத்தும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை உணவுகளுடன் இணைந்து, பார்வையாளர்களுக்காக விசேட சீன உணவு அனுபவப் பகுதியும் அமைக்கப்படவுள்ளது.

இதில் சோங்ஸி (அரிசி கொழுக்கட்டை), ஆவியில் வேகவைத்த பனிஸ், சீன பான்கேக்குகள், இனிப்பூட்டப்பட்ட ஹாவ்தோர்ன் பழக் குச்சிகள் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய சீன உணவுகள் வழங்கப்படவுள்ளன.

டிராகன் படகு திருவிழா கலாசாரத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில், சோங்ஸி தயாரிக்கும் அனுபவ நிகழ்ச்சி, சிறுவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள், பெற்றோர்–குழந்தைகள் இணைந்த விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு கலந்துரையாடல் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

2025ஆம் ஆண்டு வெற்றிகரமாக நடைபெற்ற சீனா–இலங்கை நட்புறவுக் கிண்ண டிராகன் படகு போட்டியின் தொடர்ச்சியாக, இவ்வாண்டு நடைபெறும் விழா மேலும் விரிவுபடுத்தப்பட்ட வடிவில் நடத்தப்படுகின்றது.

இது விளையாட்டு மற்றும் கலாசார பரிமாற்றத்தின் ஊடாக சீனா – இலங்கை நட்புறவை மேலும் வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கலாநிதி அலவி ஷரீப்தீன் முன்னோடிகளின் பாடசாலையின்...

2026-06-11 19:01:53
news-image

மத்திய மாகாணத்தில் 14 பாடசாலைகளுக்கு புதிய...

2026-06-11 13:26:27
news-image

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக...

2026-06-11 12:28:50
news-image

"தகவலறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட...

2026-06-09 17:43:58
news-image

கதிரேசன் மாதிரி ஆரம்ப பாடசாலையில் நடைபெற்ற...

2026-06-09 11:43:08
news-image

சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் இருநாள் தென்னருவி...

2026-06-09 09:24:07
news-image

நாவலப்பிட்டி கதிரேசன் கல்விக் குடும்பத்தின் விசேட...

2026-06-09 08:37:12
news-image

எழுத்தாளர் சிவகௌரியின் ‘முத்துப்பரல்கள்’ ஹைக்கூ கவிதை...

2026-06-07 23:47:08
news-image

யாழ்ப்பாண இராசதானி சங்கிலியன் மன்னனின் சிரார்த்த...

2026-06-07 12:06:11
news-image

வாகரை கதிரவெளியில் பகலவன் கல்வி நிலையம்...

2026-06-05 21:03:05
news-image

நுவரெலியா சீதையம்மன் ஆலய திருக்கல்யாணம் வைபவத்தில்...

2026-06-03 19:04:59
news-image

இலங்கை கோபியோ அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கைக்கான...

2026-06-03 18:14:49