நடிகை அபிநயா நடிக்கும் 'இரட்டையர்'

02 Jun, 2026 | 06:09 PM
image

'நாடோடிகள்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகை அபிநயா அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'இரட்டையர்' திரைப்படம்- எதிர்வரும் ஐந்தாம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் ஜெகதீஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'இரட்டையர்' திரைப்படத்தில் அபிநயா, இயக்குநரும், நடிகருமான சுப்பிரமணிய சிவா ,நடிகை சங்கீதா ஆகியோர்களுடன் குழந்தை நட்சத்திரங்கள் அனுமிதா - அனுஷிதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். முகமது அமீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி கே வி இசையமைத்திருக்கிறார்.

சைக்காலஜிக்கல் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆசியா ஐகானிக் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ராஜேஸ்வரி லட்சுமி நாராயணன் மற்றும் வினோத் கண்ணன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை ஷிவானி ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்குகிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' எதிர்பாராமல் நடைபெற்ற விபத்தில் சிக்கும் பெண்மணிக்கும்.. அவருடைய இரட்டை பெண் பிள்ளைகளுக்கும் இடையே விவரிக்க இயலாத முரண் ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து நிகழும் சம்பவங்களும்... அதன் திகிலான பின்னணிகளும் தான் இப்படத்தின் திரைக்கதை. ரசிகர்களுக்கு வித்தியாசமான திரை அனுபவம் கிடைக்கும்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜூலையில் வெளியாகும் நடிகர் சந்தீப் கிஷன்...

2026-06-17 17:22:36
news-image

சாதனை படைத்து வரும் நடிகை ஐஸ்வர்யா...

2026-06-17 17:19:29
news-image

அதர்வா நடிக்கும் 'இதயம் முரளி '...

2026-06-17 17:16:26
news-image

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'சத்தியவான்...

2026-06-17 17:11:45
news-image

தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும்...

2026-06-17 13:39:16
news-image

திமுக தலைவர் மு க ஸ்டாலின்...

2026-06-16 17:50:32
news-image

நடிகர் பவிஷ் நாராயண் நடிக்கும் 'லவ்...

2026-06-16 17:47:33
news-image

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் 'டார்க்...

2026-06-16 17:43:20
news-image

டிஜிட்டல் தளத்திலும் சாதனை படைக்க வெளியாகும்...

2026-06-16 17:38:02
news-image

நடிகர் ரவி மரியா நடிக்கும் 'மக்கள்...

2026-06-15 14:57:24
news-image

விளையாட்டு அணியின் உரிமையாளரான வரலட்சுமி சரத்குமார்

2026-06-15 14:55:11
news-image

புனித தலமான காசி பின்னணியில் தயாரான...

2026-06-15 14:51:57