நடிகர் கே ஜே ஆர் நடிக்கும்' அங்கீகாரம்' படத்தின் அப்டேட்

02 Jun, 2026 | 04:41 PM
image

தயாரிப்பாளரும், அறிமுக நடிகருமான கே ஜே ஆர் விளையாட்டு வீரராக நடித்திருக்கும் 'அங்கீகாரம்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'கன்டெம்ப்ட் ஆஃப் டைம்' எனும் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் தென்பாதியான் இயக்கத்தில் உருவாகி வரும் 'அங்கீகாரம்' திரைப்படத்தில் கே ஜே ஆர் ,விஜி வெங்கடேஷ், சிந்தூரி, ரங்கராஜ் பாண்டே, வசுந்தரா , மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஏ விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார் . விளையாட்டு வீரரின் வாழ்வியல் சார்ந்த படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்வஸ்திக் விஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ்.கே பிரசாந்த் - அஜித் பாஸ்கர் - அருண் முருகன் - ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற 'பூம் பூம் சட்ட சட்ட சட்ட சான்றோரே.. மெத்த படிச்ச மோலோரே..எங்க எங்க வலி மறந்தே போனீரே..' என தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தப் பாடலை பாடலாசிரியர் கார்த்திக் நேதா எழுத, பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி பாடியிருக்கிறார். நீதிமன்ற விசாரணை மூலம் உளவியல் பாதிப்பை எதிர்கொண்டிருக்கும் நாயகனின் உணர்வை வெளிப்படுத்தும் இந்த பாடல் மெல்லிசையுடன் உருவாகி இருப்பதால்.. அனைத்து தரப்பு இசை ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜூலையில் வெளியாகும் நடிகர் சந்தீப் கிஷன்...

2026-06-17 17:22:36
news-image

சாதனை படைத்து வரும் நடிகை ஐஸ்வர்யா...

2026-06-17 17:19:29
news-image

அதர்வா நடிக்கும் 'இதயம் முரளி '...

2026-06-17 17:16:26
news-image

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'சத்தியவான்...

2026-06-17 17:11:45
news-image

தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும்...

2026-06-17 13:39:16
news-image

திமுக தலைவர் மு க ஸ்டாலின்...

2026-06-16 17:50:32
news-image

நடிகர் பவிஷ் நாராயண் நடிக்கும் 'லவ்...

2026-06-16 17:47:33
news-image

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் 'டார்க்...

2026-06-16 17:43:20
news-image

டிஜிட்டல் தளத்திலும் சாதனை படைக்க வெளியாகும்...

2026-06-16 17:38:02
news-image

நடிகர் ரவி மரியா நடிக்கும் 'மக்கள்...

2026-06-15 14:57:24
news-image

விளையாட்டு அணியின் உரிமையாளரான வரலட்சுமி சரத்குமார்

2026-06-15 14:55:11
news-image

புனித தலமான காசி பின்னணியில் தயாரான...

2026-06-15 14:51:57