'மரண தண்டனை தேவையா..?' என்பதை உரக்க பேசும் 'லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு'

02 Jun, 2026 | 04:21 PM
image

நடிகர்கள் வெற்றி - ரங்கராஜ் பாண்டே ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'லட்சுமி காந்தன் கொலை வழக்கு' எனும் திரைப்படம் நீதிமன்றங்களால் விதிக்கப்படும் மரண தண்டனை தேவையா ? என்பது குறித்த விவாதத்தை மக்களிடத்தில் எழுப்பும் வகையில் உருவாகி இருக்கிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

'கொன்றால் பாவம்', 'மாருதி நகர் பொலிஸ் ஸ்டேஷன்' ஆகிய படங்களை இயக்கி தமிழ் திரையுலகிலும் தடம் பதித்த இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு' திரைப்படத்தில் வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா சகா, லிசி அண்டனி, 'அருவி' மதன், 'பருத்திவீரன்' சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம். வி. பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார். நீதிமன்ற பின்னணியில் விழிப்புணர்வு படைப்பாக உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை 2 எம் சினிமா மற்றும் டி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் கே. வி. சபரீஷ் தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் படக் குழுவினர் பங்கு பற்றினர்.

படத்தைப் பற்றி இயக்குநர் தயாள் பத்மநாபன் பேசுகையில், ': 1972 ஆம் ஆண்டை பின்னணியாக கொண்டு உண்மை சம்பவங்களை தழுவி இப்படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது. நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதி ஒருவரின் ஓர் இரவை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக மரண தண்டனை தேவையா? இல்லையா? என்பது குறித்த விவாதத்தை இந்த படைப்பு பொதுமக்கள் மத்தியில் எழுப்பும்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜூலையில் வெளியாகும் நடிகர் சந்தீப் கிஷன்...

2026-06-17 17:22:36
news-image

சாதனை படைத்து வரும் நடிகை ஐஸ்வர்யா...

2026-06-17 17:19:29
news-image

அதர்வா நடிக்கும் 'இதயம் முரளி '...

2026-06-17 17:16:26
news-image

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'சத்தியவான்...

2026-06-17 17:11:45
news-image

தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும்...

2026-06-17 13:39:16
news-image

திமுக தலைவர் மு க ஸ்டாலின்...

2026-06-16 17:50:32
news-image

நடிகர் பவிஷ் நாராயண் நடிக்கும் 'லவ்...

2026-06-16 17:47:33
news-image

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் 'டார்க்...

2026-06-16 17:43:20
news-image

டிஜிட்டல் தளத்திலும் சாதனை படைக்க வெளியாகும்...

2026-06-16 17:38:02
news-image

நடிகர் ரவி மரியா நடிக்கும் 'மக்கள்...

2026-06-15 14:57:24
news-image

விளையாட்டு அணியின் உரிமையாளரான வரலட்சுமி சரத்குமார்

2026-06-15 14:55:11
news-image

புனித தலமான காசி பின்னணியில் தயாரான...

2026-06-15 14:51:57