தமிழ் திரையிசை உலகில் ஐந்து தசாப்தங்களை நிறைவு செய்துள்ள இசைஞானி இளையராஜாவிற்கு அவருடைய ரசிகராக.. அவர் விரும்பும் ரமண மகரிஷியை பற்றிய ஒரு பாடல் உருவாக்கப்பட்டு.. அவரது பிறந்த நாளான ஜூன் மூன்றாம் திகதியன்று வெளியிடப்படுகிறது.
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட டென்மார்க் வாழ் ஈழத் தமிழரான கிளாடி ஜெரார்ட் தனது சொந்த இசை நிறுவனமான டிரம்ஸ் ஜெர்ரி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் 'நைகம்' எனும் சுயாதீன இசை அல்பம் ஒன்றை இசைஞானியின் ரசிகராக.. அவருக்கு சமர்ப்பிக்கும் வகையில் உருவாக்கி இருக்கிறார்.
இளையராஜாவின் ஆன்மீக குருவாக திகழும் ரமண மகரிஷியை பற்றிய ஒரு பாடலை... பாடலாசிரியரும், பாடகியுமான சௌகியா எழுதி , இசையமைத்து , பாடியுள்ளார்.
இந்த பாடலுக்கான காணொளியை திரைப்பட இயக்குநர் ஜெயப்ரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார். 'ஏ ஜேர்னி ஆஃப் ஒன்னெஸ் ' எனும் டேக் லைனுடன் வெளியிடப்பட்டிருக்கும் இந்த சுயாதீன இசை அல்பத்தில் இசையமைப்பாளர் கண்ணன் நாராயணனும் தன்னுடைய பங்களிப்பை வழங்கி உள்ளார்.
இசைஞானி இளையராஜா- ரமண மகரிஷி- இசைஞானியின் ரசிகர்- ஆகியோரின் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'நைகம்'- இசை ரசிகர்களை மட்டும் அல்லாமல் ஆன்மீக உணர்வாளர்களையும் கவரும் என அவதானிக்கப்படுகிறது.
இதனிடையே டென்மார்க் வாழ் ஈழ தமிழரான கிளாடி ஜெரார்ட் கடந்த வாரம் சென்னையில் கங்கை அமரன் எழுதிய 'உயிரிணையே ' எனும் சுயாதீன இசை அல்பத்தை வெளியிட்டார் என்பதும் அதற்கு இணையவாசிகளிடம் பேராதரவு கிடைத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM