இயக்குநர் அமீர் வெளியிட்ட எழுத்தாளர் ஜெகன் கவிராஜின் 'ஈரம் காயாத கதைகள்'

02 Jun, 2026 | 03:46 PM
image

'தாய் கிழவி' படத்தில் இடம்பெற்ற பாடல் மூலம் திரையிசை ரசிகர்களிடத்தில் பிரபலமான பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ், 'ஈரம் காயாத கதைகள்' என்ற பெயரில் எழுதிய சிறுகதை தொகுப்பு புத்தக வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநரும், நடிகருமான அமீர் - இசையமைப்பாளரும், பாடகருமான நிவாஸ் கே. பிரசன்னா ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றி, நூலை வெளியிட்டனர்.

இந்நிகழ்வில் எழுத்தாளர்- திரைக்கதை ஆசிரியர் -உரையாடல் ஆசிரியர்- இயக்குநர்- நடிகர்- என பன்முக ஆளுமை திறன் பெற்ற கவிதா பாரதி இந்த புத்தகத்தை வாசித்து வாழ்த்துரை வழங்குகையில், '' வட்டார வழக்கை பேசுவது என்பது தற்போது கேலிக்குரியதாக ஆகிவிட்டது.

ஒவ்வொரு அம்மாவிற்கும் ஒரு சமையல் கை பக்குவம் உண்டு. ரசம் என்பது புளியையும்... தக்காளியையும் ..கரைத்து வைப்பது தான். ஆனால் ஒவ்வொரு அம்மாவின் ரசத்திற்கும் ஒரு பிரத்யேக சுவை உண்டு.

வட்டார வழக்கு இல்லாமல் போவதும் ஒரு மொழியினுடைய மிகப்பெரிய இழப்பு என நான் கருதுகிறேன். இந்நிலையில் எழுத்தாளர் ஜெகன் கவிராஜ் வட்டார வழக்கு நடையில் இந்த ஒன்பது கதைகளை எழுதி இருப்பதை பாராட்டுகிறேன்.

எழுத்தாளர்களுக்கு ஒரு சமூக நோக்கம்- பொறுப்புணர்வு - நேர்மை-  உண்மை - இருக்க வேண்டும். அந்த வகையில் எழுத்தாளர் ஜெகன் தான் பார்த்த செய்திகளை... நீதிகளை... அநீதிகளை... இதில் பதிவு செய்திருக்கிறார். அதனால் இந்தப் புத்தகம் தரமானது என்று நான் உத்திரவாதம் அளிக்கிறேன் ''என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right